Wednesday, June 28, 2006

<>விநாயகர் <>

விக்கினம் தீர்க்கும் முதல்வன்- விநாயகன்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடைவடிவினர்
பயில்வலி வலமுறை-- திருஞான சம்பந்தர்

இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்ற எல்லாப் பொருகளிலும்தங்கியிருப்பவன் இறைவன். '' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே'' ;அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது'' இறை.ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்ச்சணா மூர்த்தி,பராசக்திபரம்பொருளின் ௾இச்சா,கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின் வடிவம் என்று கூறப்படுவது விநாயகர்.தமிழர் வழிபாட்டில் விநாயகர் புகுந்த விதம் மற்றும் அவர் அரசமரத்தில் அமர்ந்தவிதம் பற்றிப் படித்ததை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.பல்லவ மன்னன் பரஞ்சோதி வாதாபி வென்று கொண்டு வந்த பல பொருட்களில்விநாயகரும் அடங்குவார். அதனாலேயே ' வாதாபி கண்பதிம் பஜே ' என்றுவணக்கப் பட்டால் உருவாற்று. விநாயகர் வழிபாடு மேலைச் சாளுக்கியர் ஆண்டபகுதியான மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது.கொண்டு வந்த பரஞ்சோதி மன்னன் விநாயாகரை அரச மரத்தின் கீழ் ஏன் வைத்தான்?பரஞ்சோதிக்கும் முற்பட்ட காலத்தில் பெளத்தம் தமிழகத்தில் வலுப்பெற்றிருந்தது.புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்ததை அடுத்து அவரின் உருவங்கள் அரசமரத்தடியில் நிறுவப்படிப்படிருந்தன. ௾தைத் தொடர்ந்து பரஞ்சோதி மன்னனும்வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை பிற சமய சிலைகளைப் போலஅரச மரத்தடியில் அமர வைத்தான்.பல்லவர் காலத்தில் சமய மாறுபாடு உண்டானமை உண்மையே ஆயினும் அம்மாறுபாடுவேறுபாடற்ற சங்க காலச் சமய நெறியினை வழங்க தவறிவிட்டது. வைதிகத்தோடுபிணைந்த பிறிதொரு கலவைச் சமயமே தமிழகத்தில் கால் கொண்டது. அத்துடன்புதுப்புது விதமான கடவுளரும் வழிபடு முறைகளும் புகுந்தன. விநாயகர் வணக்கம்௾இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவாரகியபரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்தவற்றுள் பல பொருள்களைக்கொண்டு வந்தமை போன்ற பிள்ளையாரையும் உடன் கொண்டு வந்தார். விநாயகர்வழிபாடு ௾இன்றும் மேலைச் சாளுக்கியர் ஆண்ட மராட்டியப் பகுதிகளிலும் பம்பாய்பிறவிடங்களிலும் மிகச் சிறந்த முறையில் விரிந்த வகையில் கொண்டாடப்பெறுவதை அறிகிறோம்.பரஞ்சோதி விநாயாகரை ஏன் கொண்டு வந்தார். அதனை அரச மரத்தின் கீழ் நிறுவினார்?அரச மரத்துக்கும் விநாயகர் உள்ள தொடர்பு என்ன?பெளத்த சமயக் காலத்தில் தமிழ் நாட்டில் புத்தர் அருளாளராக அடிப்படையான அரசமரத்தடியில் அவருடைய பேருருவங்களை நிறுத்தி வழிபட்டனர். அடுத்த வந்த சமணர்களும்தம் சமயத் தலைவர்களை மக்கள் மனமறிந்து, அதே நிழலில் நிறுவி வழிபட்டிருக்க கூடும்.அசோகரும் அவருக்கு அருந்துணையாக அமைந்ததன்றோ? அதே வேளையில் வாதாபிவிநாயகரின் பேருருவைக் கண்ட பரஞ்சோதியார் இ ௾ந்த விநாயகர் பேருருவை அசரமரத்தின் கீழ் நிறுத்தின் மக்கள் மனம் நிறைவு பெறுவர் எனக் கணித்து இ ௾ங்கே கொண்டுவந்து நிறுவிவிட்டார். மக்கள் அன்று மன நிறைவு பெற்றதோடு என்றும் அவ்விநாயகரையேமுதல் வழிபடு கடவுளாகவும் கொண்டுவிட்டனர். எனவே, பரஞ்சோதி அரசியல் வெற்றிமட்டுமன்றித் தம் சமயக் கொள்கையிலும் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதை ௾இவ்வரலாறுகாட்டுகிறது.'' ்பிள்ளையாரைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் முதன் முதல் பரஞ்சோதியாரின்காலத்தவரான ஞானசம்பந்தர் பாடுகிறார்''விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமேபரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்;பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி,குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்;என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு ௾வரின் ஆசியும் வேண்டும்என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரானஇவருக்கு தமிழ் நாட்டில் கோயில் இல்லாத ஊர் இல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்குஎளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.அவரது திருவுருவம் இல்லாத இ டத்தில் மாட்டுச் சாணத்திலோ, மஞ்சள் பொடியிலோபிடித்து அருக சாத்தி வழிபாடு செய்வது இந்துக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்துவரும் பழக்கம். இந்திய நாட்டில் மட்டுமின்றி இந்திய கலை நலம் பரவியுள்ள இலங்கை,பர்மா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன், மெக்சிகோ,பெரு போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. வைஷ்ண சமயத்திலும், வழிபாட்டிற்கு இடந்தராதபுத்த,ஜைன மதங்களிலும் அவரவர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பிடமுண்டு.விநாயகருக்கு தனியாக அமைந்துள்ள ஆலயங்கள் எண்ணில் அடங்கா.தனிப்பெருந் தலைவர் விநாயகர் என்றால் நாயகனில்லாதவர் என்பது பொருள். பிள்ளையார் என்ற சொல் விநாயகரையே குறிக்கும் இதிலிருந்து விநாயகரே சிறந்த பிள்ளையாகக்கருப்படுகிறார். இன்னும் அவருக்கு முன்னவன்,கணபதி, விக்னேஸ்வரன், ஐயங்கரன்,கஜானனன்,ஏகதந்தன்,மோத்கஸ்தன், பிரணவ சொரூபி எனப் பல காரணப் பெயர் உண்டு. மக்கள் ஈடுபடும் எம்முயற்சியும் இ ௾டையூறின்றி ௾இனிது முற்றுற விக்கினந் தீர்க்கும் விநாயகனை முதலில் வணங்குவது வழக்கில் வந்துள்ளது. ஆலயங்களிலும் அவனுக்கே முதல் வழிபாடு வழக்கில் வந்துள்ளது. தனி பெருந் தலைவனான சிவனும் விநாயகரை வழிபடத் தவறமாட்டார். திரிபுர சம்ஹாரம் செய்யச் சென்ற ௾இறைவன் ௾இப்பிரானை நினையாத்தால் அவரதுதேர் அச்சு முறிந்தது.'' விக்கினந்தீர்க்கும் விநாயகன் எனச்சிக்கென இறைவன்செப்பாதேறலின் சங்கரன் அச்சிறுத்தருளுமரசே போற்றி''''முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை இரதம்அச்சது பொடிசெய்த அதிதீரா..''என்பது அருணகிரியார் திருவாக்காகும்.அரக்கர்கள் செய்த கொடுமையைத் தாங்க மாட்டாத தேவர்களும் பிறரும் சிவபிரானிடம்முறையிட, அவர்களின் துயர் தீர்க்க யானை முகத்துடன் விநாயக மூர்த்தியை தோற்றுவித்தார்.'' பிடியதன் உருவுமை கொள மிக கரியதுவடி கொடுதனதடி வழிபடுமடுமவர் இடர், கடி கணபதி ''எனத் திருஞான சம்பந்த சுவாமிகள் போற்றும் அத்திமுகத்தான் இவரே.தேவர் துயர் தீர்க்கத் திருவுளங் கொண்ட விநாயகர் கயமுகாசுரனுடன் போர் செய்து,அவன் எந்த ஆயுதத்தாலும் இறவாதிருக்க வரம் பெற்றுள்ளதை உணர்ந்து, தனதுதந்தங்களில் ஒன்றை ஒடித்து எறிந்து அவனை வைத்தார். அவன் அந்தச் சரீரம் மாறிபெருச்சாளி வடிவம் கொண்டு வரவே ஆரோகணித்து அதனைத் தன் வாகனமாகஅருளினார், அதாவது ஆணவமலம் அடங்கி ஒடுங்கி நிற்பதைக் குறிக்கும்.சுயமுகாசுரன் அதிகாரஞ் செலுத்திக் கொண்டிருந்த போது தேவர்கள் அவனிடத்துவருகையின் போது தலையில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்தான்.''கிட்டித்தன் முன் கிடைத்துழி நெற்றிற்குட்டிக் கொண்டு குழையினை யிற்கரத்தொட்டுத் தாழ்ந்தெழ சொற்றனன் ஆங்கதும்பட்டுப்பட்டுப் பழியிடை மூழ்கினேம்''கயமுகாசுரன் இறந்த பின், தங்கள் வினை தீர்த்த விநாயகப் பெருமானைப் பணிந்துதேவர்கள் அன்று முதல் '' சிரங்களிற்குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் செய்து ''இனி இப்படியே எங்கள் வந்தனையை ஏற்றுக் கொள்ளவேண்டும் எனப் பிராத்தித்தார்கள்.இன்றும் இம்முறையில் வழிபடுவதற்குக் காரணம் இதுவே.விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும்கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப்போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்டசராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரதுபேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்றபுத்தியினையும் அருளுபவர். '' சித்தி புத்தியோர் புகழும் உத்தம குணாதிபன்''.விநாயகருடைய காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும்பிரணவத்தின் வடிவைக் காட்டும்.அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி;படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும்மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ ௾ன்பம்,வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்குதடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்துஅகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒருமுதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டுபுகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்குநிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்திருமலனைக் கணப்தி நினைந்து வாழ்வோம்.விநாயகர் ஐந்து திருக்கரங்களை உடையவர். ஒரு கரத்தில் மோதகம் ஏந்தியிருக்கிறார்;இது தனக்காக. மற்றொரு கையில் ஏக தந்தமாகிய ஒன்றைக் கொம்பை வைத்திருக்கிறார்;இது விண்ணவர்க்காக. தும்பிக்கையில் நீர் நிறைந்த பொற்கலசம் வைத்திருக்கிறார். இதுதாய் தந்தையாகிய பார்வதி பரமேஸ்வரரை வழிப்படுவதற்காக இங்ஙனம் ஒவ்வொரு கரத்தையேபிற செயலுகளுக்குப் பயன் படுத்த்தும் விநாயகப் பெருமான், தம்முடைய அடியவர்களுக்குமட்டும் இரு கரங்களை ஒருங்கே பயன் படுத்துகிறார். அடியவர்களின் வினைகளை ஒழித்துஇன்பங்களையே தரும் இயல்பினராகிய அவர் ஆணவ பலம் என்னும் கொடிய யானையைபிணித்து அவர்கட்கு அருள்புரிவதற்காக பாசம் அங்குசம் என்னும் அரு கருவிகளையும்எஞ்சிய இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டுள்ளார். மாபெரும் கவிஞராகிய கச்சியப்பமுனிவர் தம் கற்பனைத் திறத்தினால் பெருமானின் ஐந்து திருக்கரங்களும் செய்யும் செயல்களைஅழகுற விளக்கிறார்.'' பண்ணியம் ஏந்தும் கரம் தனக்குனா ஆக்கிப்பால்நிலா மருப்பமர் திருக்கைவிண்ணவர்க்காக்கி, அரதனக்கலசவியன் கரம் தந்தை தாய்க்காகிக்கண்ணீல் ஆவை வெங்கரி பிணித்துஅடக்கிக் கரிசினேற்கிருகையும் ஆக்கும்அண்ணலைத், தணிகை வரை வளர்ஆபத் சகாயனை, அகந்தழீ இக்களிப்பாம்.முதற் பொருளாகிய விநாயகப் பெருமான் சமயத்திற்கேற்ற சிறந்த சாதுரிய முடையவர்.நாரத முனிவரின் கொடுத்த மாம்பழத்தை பெற '' அந்த உலக மெலாம் சிவபிரானுடை திருவுருமே''என நினைந்து அம்மையப்பரை சுற்றி வலம் வந்து அப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.இதனை :-''மறை முனி ஒருவன் மாங்கனி கொணர்ந்துகறைமிட்ற்றிறைவன் கையிற் கொடுப்பவேலனும் நீயும் விரும்பி முன்னிறகஒரு நொடியதனினுலகெலாம் வலமாய்வருமவர் தமக்கு வழங்குவோம் யாமெனவிரைவுடன் மயின்மிசை வேலோன் வருமுன்னர்அரனைவலம் வந்து அக்கனி வாங்கியவிரகுள விகனவிநாயாக போற்றி ''...வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் உருக்கமான பாட்டு இங்கு கருதத்தக்கது'' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறாஉணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்குறை தவிர்க்கும் குணப் பெருங் குன்றமே !வெருவும் சிந்தை விலகக் கஜானனம்விளக்கும் சித்தி விநாயக வள்ளலே !வினைதீர்க்க வல்லான்`````````````````''வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும் !வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழதுள்ளியோடுந் தொடர்ந்த வினைகளே''என்னும் சிறிய ஈரடிப் பாக்களும்,'' கணபதி என்னிடக்கலங்கிடும் வல்வினை '', என்னும்'' மாயாப்பிறவி மயக்கம் அறுத்து...' என ஒளவையாரின் அகவலில் வரும் சொற்தொடரும் விநாயகர் ஆன்மாக்களின் மும் மலங்களையும் போக்கி வீடு பேறு அருளுவர்எனபதை விளக்குவன். ஒளவையாரின் ''விநாகய அகவல்'' ஒவ்வொரும் படிக்க வேண்டிய கருவூலம். பொருளும் மந்திர சக்தியும் நிறைந்த அகவல் படித்தாலே போதும், வினைகள் அகலும்.விநாயகப் பெருமான் வினையை வேரக்க வல்லவர் என்பதைப் பதினோராம் சைவத்திருமுறையில்வரும் கபிலதேவ நாயனாடின் பாடல் மிகத் தெளிவாகக் கூறுகிறது.''விநாயகனே வெவ்வினை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் -விநாயக்னே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்கண்ணிற் பணிமின் கனிந்து.விநாயகப் பெருமானைப் பூசித்துப் பேறு பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்புசுண்டி மகரிஷி, திரு, நாராயூர் நம்பியாண்டவர், நம்பி திருவெண்ணெய் நல்லூர் மெய் கண்டசிவாச்சாரியர், ஒளவையார், இன்னும் இந்திரன் முதலிய இறையவரும் ஆவர்.ஒளவையாரை தம் தும்பிக்கையால் திருக்கோவிலூரிலிருந்து திருக்கைலாயத்தில் விடுத்தவிநாயகரின் அருட்கருணை மறக்கற்பாகதன்று. இத்தகைய சிறப்புப் பொருந்தியவினைதீர்க்கும் விநாயகப் பெருமானை நாமும் மனமொழி, மெய்களால் வழிபட்டு நாளும்வாழ்ந்து நலம் பெறுவோம்.என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்இன்பத்தமிழ் எங்கள் மொழிதமிழ் எமது மொழிதிருச்சிற்றம்பலம்அன்புடன்சிங்கை கிருஷ்ணன்

<>காசி யாத்திரை பகுதி--1<>

ந்தியாவிலேயே அதிகமான அளவு கோயில்கள்
உள்ள நகரம் காசிதான் என்று வரலாற்று ஆசிரியர்கள்
கூறுகிறார்கள். காசியில் சுமார் 1800 கோயில்கள்
இருப்பதாக கூறுகிறார்கள்.

காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி,
துண்டி, கணபதி, துர்க்கா, சங்கட விமோசன, அனுமான்,
காலபைரவர், பசுபதிநாதர், பிந்துமாதவர் இப்படி அங்கேயேயுள்ள
ஆலயங்களே அநேகம். இரவும் பகலும் எந்த நேரத்திலும்
ஆலயங்களுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டத்தை அங்கு
காணலாம்.

அதேபோல அதிகமான புண்ணிய ஸ்நானம் கங்கை கரை ஓரம் அமைந்துள்ளது. வருணை நதியும், அஸி நதியும் இரண்டு எல்லைகளுகுள்ளாக சுமார் இருபது நீராடும் கட்டங்கள் இங்கே அமைந்திருக்கிறது. இவற்றின் வழியாக செல்லும் கங்கா
நதியை மாதாவாக பெண்கள் மலரில் விளக்கு வைத்து
பூஜை செய்கிறார்கள். நமது இந்து சமயம் தழைக்க வந்த
ஞானிகள் பலரும் உலவிய புனித பூமி வாராணசி எனப்படும்
காசி.

துளசிதாசர்,கபீர் முதலாக சமீப காலத்து மாஆனந்தமாயி வரை
இங்கே வாழ்ந்த பெரியோர்க பலர் உண்டு. பாரதியார் கூட இங்கு
சில காலம் தங்கி இருந்துள்ளார். துளசியின் இராமசரிதத்தைப்
பாடிவாறு மக்கள் கொண்டாடும் இராம லீலாவும், அன்னபூரணி
வெள்ளி இரத்தில் பவனி வரும் தீபாவளி திருநாளும்,
சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரியும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இராமேசுவரத்தில் இராமபிரான் ஈசனை வணங்கிய

இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டுபிரயாகைக்குப்

போய் கரைத்துவிட்டு,அங்கிருந்து கங்கை நீரை

எடுத்துக்கொண்டு காசிக்குப்போய் விசுவநாதரை தரிசனம்

செய்துவிட்டு, காயவில் பித்ருக்களுக்குச் செய்யவேண்டிய

கர்மாக்களைச் செய்து முடித்துவிட்டு இராமேசுவரத்துக்குத்
திரும்பி வந்து, கொண்டு வந்த கங்கை நீரால் இராமேசுவர
நாத சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, ஊருக்குத்
திரும்புவது.
இதுதான் முழுமையான காசி யாத்திரை என்பது.

காசி என்ற பெயருக்கு ஒளி தரும் இடம் என்று பொருள் கூறுவார்கள். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக நான்கு மைல்கள்.இதில் 64 நீராடும் கட்டங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவற்றில் மிகமுக்கியமானவை
5. இவற்றுக்கெல்லாம் காரணப் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கின்றன. சிலவற்றுக்கு,அருகில் உள்ள ஆலயம், கட்டிடத்தின் பெயரையே கொடுத்திருக்கிறார்கள்.அஸி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. அஸி நதி இங்குதான் வந்து கங்கையில் சங்கமம் ஆகிறது. தசாசுவமேத கட்டம்- பத்து அசுவமேத யாகங்களைச் செய்த பலன் கிடைக்கக்கூடிய கட்டம்;வருணா கட்டம் ஖வருணா நதி சங்கமாகும் காசியின் மறுமுனையில் உள்ள கட்டம்; பஞ்சகங்கார கட்டம்- ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமமாகும் இடத்தில் உள்ள கட்டம். மணிகர்ணிகா கட்டம் எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரதான நீராடும் கட்டம். ஐமுட் கட்டகளிலும் கங்கையில் நீராடவேண்டும். இங்கு பித்ருகளுக்கு காரியம் செய்யப்படுகிறது. காலை ஐந்து மணிக்கு தொடங்கினால், ஐந்து கட்டகளிலும், கங்கையிலும் நீராடி பித்ரு காரியம் செய்வதற்கு பிற்பகல் இரண்டு மணியாகும். பிற்பகலில் ஓய்வெடுத்து மாலையில் காசி விசுவநாதரை தரிசிக்கலாம்.மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டி மண்டபம் இருக்கிறது. இங்கே நீராடி இந்த மண்டபத்தில் அமர்ந்துதான், முக்கியமான பித்ரு கர்மாக்களைச் செய்கிறார்கள்.இதை ஒட்டி அமைந்துள்ள அரிச்சந்திர காட் மிகப் பழைமையானது.இங்குதான் சந்திரமதி தனதுமகன் லோகிதாசனைத் தீ மூட்டி எரிக்க வந்தாள். அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து மனைவியும், மகனையும் பார்த்தான். உண்மைக்குக் கிடைத்த உயர்வைத் தேவர்கள் இங்கேதான் அறிந்து கொண்டார்கள். அரிச்சந்திரா காட்டில் உடல் எரிக்கப்படுகிறது..இந்துக்களிடையே மிகவும் பெருமை தரும் பாக்கியமாகக் கருதப்படுகிறது.அரிச்சந்திரன் வைத்துப் பூஜித்த மைசானேசுவரர்ஒஒ என்ற சிவலிங்கம் இன்றும் அங்கே இருக்கிறது.மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி மறைபவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.மணிகர்ணிகாஷ்டகஒஒத்தில் ஆதிசங்கரர் இந்த கட்டத்தைப் பற்றி மிகச்சிறப்பாக கூறி இருக்கிறார். இங்கே நீராடியபின் மறைபவர்கள் இந்திரனும் சூரிய தேவனும் கை நீட்டி அழைத்துச் சென்று சொர்க்கத்தில் சேர்ப்பார்கள் என்பது நம்பிக்கை.மணிகர்ணிகா கட்டத்தின் அருகில் ஒரு குளம் இருக்கிறது. முதலில் கங்கையில் நீராடி விட்டுப் பிறகுஇதிலும் நீராடினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். சக்கரதீர்த்தம் என்ற இந்தக் குளம் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம். மகாவிஷ்ணுவ தனது கையில் உள்ள சக்கராஆயுதத்தினால் இந்தக்குளத்தைத் தோற்றுவித்தாகவும்,கங்கையில் மூழ்கி எழுந்த அவருடையதிருமேனியிலிருந்து வடிந்த புனித நீர் இந்தத் திருக்குளத்தை நிறைந்ததாகவும் சொல்லுகிறார்கள்.இந்தக் குளத்தில் நீராடப் பார்வதியும், பரமேசுவரனும் வந்தார்களாம். அப்்படி நீராடியதும் ஈசன் ஆனந்தநடனம் ஆடத்தொடங்கி விட்டாராம். அப்போது அவர் காதில் அணிந்திருந்த குண்டலாபரணம் தெறித்து, முடியிலிருந்த மணியுடன் கங்கையில் விழுந்துவிட்டதாம்.பார்வதி தேவியின் கர்ண புஷ்பம்,விசுவநாதரின் [1] முடிமணி இரண்டும் சங்கமமான இடம் என்பதனால் அந்த நீராடும் கட்டத்துக்குத் தனி மகிமை இருக்கிறது.இந்த மணிகர்ணிகா கட்டத்தில் நீராடியபின் சக்கர தீர்த்தத்தில் குளித்து,சிரார்த்தம் செய்யவேண்டும்.இங்கு பலவகை தானங்கள் செய்வதைப் பார்க்கலாம்.வசதியுள்ளவர்கள் பசுவை வாங்கி தானம் செய்கிறார்கள். மணிகர்ணிகா கட்டத்தை ஒட்டித் தாரகேசுவரர் ஆலயமும்,மேலே துர்க்கையின் கோயிலும் இருக்கின்றன. இவற்றை வலம் வந்து உள்ளே போய் சுவாமியைத் தொட்டுப் பூஜிக்கலாம்.கங்கை நீரை எடுத்து அபிஷேகம் செய்யலாம். மலர் மாலைகளைச் சார்த்தலாம்.பக்தர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.தாரகேசுவரர் தரிசனம் முடித்துக்கொண்ட பிறகுதான் காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்.கையில் கங்கை நீரை எடுத்துச் சென்று விசுவநாதருக்கு அபிஷேகம் செய்யலாம்.காசிவிசுவநாதர் ஆலயம் குறுகலான ஒரு சந்தில் இருக்கிறது. உள்ளே பிராகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் கட்டப்பட்டது. நீராடிவிட்டு வருபவர்கள்கவனமாக வரவேண்டும்.மையத்தில் காசிவிசுவநாதரின் கருவறை இருக்கிறது. கங்கை நீராலும்,பாலாலும்,வில்வ இலைகளாலும் அர்சித்து, அபிஷேகம் செய்யலாம். மலர்களை, மலர் மாலைகளை சாத்தி மகிழலாம்.இரவு வேளையில் இங்கே மகேசுவர பூஜை நடக்கிறது. ஒரு மணி நேரம் பூஜை செய்கிறார்கள்.சிவ தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப்படியாகச் சுவாமியை அலங்கரிக்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், தேன் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது. ஐந்து முக தீபம் காட்டி அர்ச்சனை முடிக்கிறார்கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலைகளையும், பஞ்சமுக விளக்குகள் [தீபம்]ஐம்புலன்களையும் உணர்த்துவதாக விளக்கம் கூறுகிறார்கள்.இந்த இரண்டையும் பயன்படுத்தி ஈசனை வழிபட வேண்டும் என்பது தத்துவம் ஆகும்.காசிவிசுவநாதர் ஆலயத்தில் சிவராத்திரி மிகவும் விசேஷமானது.இந்த ஆலயத்தை அகல்யாபாய் என்றராணி முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள். கோயிலில் இருபத்தியிரண்டு மணங்கு நிறையுள்ள தங்கத் தகடுகள் உபயோகிக்கப்பட்டதாம்.அதனால் இன்றும் காசிவிசுவநாதர் ஆலயம் தங்க ஆலயம் என்றே குறிப்பிடுகிறார்கள். காசிவிசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள அதே தெரு சற்றே தூரத்தில் மாதா அன்னபூரணியின் கோயிலும் அமைந்திருக்கிறது. காசிவிசுவநாதருக்கு தேவி உணவு அளித்த இடம். அதனால் காசியில் பசிப்பிணி இல்லை என்று சொல்லுகிறார்கள். இதை நிரூப்பதைப் போலவே இங்கு வரும் யாத்திரீகர்கள் அன்னதான் உற்சவம் நடத்துகிறார்கள்.அழகான சித்திர வேலைப்பாடுகள் அமைந்த அன்னபூரணியின் கோயில் மராத்திய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் அமைந்திருக்கிறது. அதைப் பன்னிராண்டு கல்தூண்கள் தாங்குகின்றன. அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள சலவைகள் தளத்தில் பக்தர்கள் அமர்ந்து பஜனை செய்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.கர்ப்பக்கிருகத்தில் உள்ள அன்னபூரணியைத் துவாரங்கள் செதுக்கிய பலகணியின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகம் மட்டுமே தரிசனத்துக்குக் கிட்டுகிறது. அன்னபூரணியின் அழகானஅலங்காரத்துடன்,கீழே ஸ்ரீ சக்ரமேரு யந்திரம் இருக்கிறது.இடக்கரத்தில் தங்கக் கிண்ணம்,வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன், பிச்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் அன்னபூரணி.அம்பாள் தனியாக அமர்ந்திருப்பதில்லை.இருபுறமும் ஸ்ரீ தேவியும்,பூதேவியும் கொலுவிருந்து,கையைதூக்கி ஆசீர்வதித்து அருளுகிறார்கள். இவையும் பொன்னால் ஆனது.விசுவேசுவரரின் உருவம் மட்டும்வெள்ளியால் ஆனது.அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷம்.அன்னபூரணி ஆலயம் அருகில் விசாலாட்சியின் ஆலயம் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில்இந்த ஆலயம் தமிழ் நாட்டு பாணியில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான இந்த கோயில் நாட்டுக் கோட்டை செட்டியார் அமைப்பு பராமரித்து வருகிறது.குத்து விளக்கின் ஒளியில் கோயில் கர்ப்பக்கிருகத்தில் தேவியைத் தரிசிக்கலாம். சிவலிங்கம், தண்டாயுதபாணி, விநாயகர், சண்டிகேசுவரர் ஆகியோர் சந்நிதிகளுடன் நவக்கிரங்களும் உண்டு. தமிழ் நாட்டு ஆலய அமைப்பிலேயே உள்ளது.இங்கு நவராத்தியும்,சிவராத்திரியும் விசேஷமானது. காசி விசுவநாதர், அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய மூன்று ஆலயங்களிலுமே நாதசுர இசை உண்டு. தமிழ் நாட்டின் முத்திரையை அங்கே மனம் குளிரப் பார்த்து காது குளிர கேட்கலாம்.பகுதி-1 நிறைவு. பகுதி-2 விரைவில்.

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
இன்பத்தமிழ் எங்கள் மொழி
தமிழ் எமது மொழி
திருச்சிற்றம்பலம்
அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கப்பூர்

<>ஆதி பராசக்தி<>

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.
பிரபஞ்ச சக்திகளில் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுல
கத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக
விளங்குவது ஆதி பராசக்திதான்.

ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷ்ணு,
மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார்.
இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம்.
இவர்களே சதுர் வர்ணகளும் ஆவர்.பராசக்தி - பிரம்மதேவன் -
மகாவிஷ்ணு - மகேஸ்வரன் இவர்களின் சக்திகளைக் கொண்டு
நிபுணர்கள் அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளானர்.

பராசக்தி - கார்பன் டிஹோக்சிடா [Carbon Diokside]மகாவிஷ்ணு - ஆக்சிஜென் [Oxygen]பிரம்மதேவன் - நைட்ரஜன் [Nitrogen]மகேஸ்வரன் - ஹைட்ரஜன் [Hidogen]Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வுவின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துக் கொள்ளலாம்.திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ''எலக்ரோன்'' [Electron], ''நியூட்ரோன்''[Neutron],''புரோட்டன்''[Proton] என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட நியூக்லேயஸ் ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள்.நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகயே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன[Electron] பிரம்மதேவனும், 'நியூட்ரோனாக [Neutron] விஷ்ணுவாகவும், ''புரோட்டோனாக''[Proton] மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரி¢ய பொருளாக விளங்குகின்றாள்.மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். ''கார்பன்''தான் உலகில் சக்தி பெற்ற உலோகம். இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில்அதிகமாக இருப்பதால் மற்ற கிரகங்களையும் அதை சுற்றி வரச் செய்கிறது. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடந்தபோதுதான் இரும்புச்சக்தி வெளியானது. இதிலிருந்து செம்பு,சொர்ணம்,கனகம்,வைரம் வெளியானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும்,மலரும் அதன் மணமும் போலவும்,தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு இயைந்து நிற்பது.இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும்,நீலச்செம்மேனி (கிருஷ்ணனின் நீல நிறம்) உடையதாகவும் மறைகளிற் கூறப்படும். அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு ஆகும்.அருள் ஒளி அல்லது அருளாற்றல் பல வகை ஆற்றல்களும் கொண்டு வழிபடுவது பண்டைய மரபாயிற்று. இயற்கையின் ஆற்றல்களுள் மழைப்பெயல் உலகம் உய்ய,வாழ இன்றியமையாதது.நீர் இல்லாது உலகமில்லை. திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பை கூறியுள்ளார். இத்தகைய மழைக்கு அதி தெய்வமுள்ள அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகும்.[மாரி-மழை] உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கியதுணைக்காரணமாகும். இவ்வருட்சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி,மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக,நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்களை அமைத்தனர் என்று உணரும்போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்கு புலப்படுகிறது.தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்கள்,''அம்மை அப்பா'' எனவும்,''தாயிற் சிறந்த தயாவானத்தத்துவனே'' எனவும்,''தாயாயெனக்குத் தானெழுந்தருளி'' எனவும்,''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'' எனவும் அழைக்கலாயினர். தாயுமான அடிகள்,''பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது முண்டோ'' எனவும்,''அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென் மறை பேசும் ஆனந்த ரூப மயிலே'' எனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது. தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகியலறிவால் உணர்ந்த நமது முன்னோர்கள்,இறைவனின் அருளாற்றலை உலக நாயகியாக அகிலாண்டகோடி ஈன்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர். பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப்படுத்தி, இறைவன் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்று பணியென்று சித்தாந்த சாத்திரம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த நிலையைத திருமூலர் தமது திருமந்திரத்தில்:-‘’வாயும் மனமுங் கடந்த மனோன்மணிபேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளைஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்தாயும் மகளுத் தாரமு மாமே...’’ -- என்கின்றார். அதாவது, அளவிலா ஆற்றலும், அருளுமுடைய ஆதிசக்தியின் வரப்பிரசாதத்தால் வந்த திரிசக்திகளாகிய பராசக்தி, மனோன்மணி,திரிபுரசுந்தரி, ஆகியோர் பரமசிவத்தோடிணைவதால் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நிறைவேறுகினறன. எனவே அந்த ஆதிபராசக்தியே எல்லாமாய் இருக்கிறாள்.அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து கன்னியாகுமரி வரைசிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை,அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய வரை,ஏன் இன்றுஅமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருகிறாள். சிறப்பாக தமிழ் நாட்டில்,சிங்கப்பூரில்,மலேசியாவில் ஆதிசக்தி அம்மன் ஆலயம் இல்லாத ஊரே இல்லை எனச் சொல்லலாம். மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும் புற்றாய் மாமருந்தாய், மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.ஏழாவது கர்ப்பமாக பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்தால் கருமாரியாக பெயர் பெற்றாள்.சூரியன் மறைந்தாலும்,பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட வெள்ளையர்கள்,மாரியம்மனுக்கு மட்டும் மிகவும் அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இரு நூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி,தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பைலையால் நீக்கி வருவது கண்கூடு. இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் விரும்புவார் விரும்புவதை எல்லாம் நல்கும் பரதேவதையாகிய தம் நிமித்தம் தனது மெய்யன்பர்கள் விரும்புவதையும் நிறைவுசெய்கிறாள்.சிலந்திப் பூச்சியானது தன்னிலிருந்தே தமக்கு வீடு அமைத்துக் கொள்வது போலவே அம்மன் தமது அன்பர்கள், அடியார்கள் ஆகியோரை உறுதிமிக்க மனதகத்தே இருந்து அருள்பாலிக்கிறாள்.அன்னை மனத்தகத்தே இருந்து நல்ல எண்ணங்களை,நல்ல உணர்வுகளை தன்மைகளைஎழுப்புகிறாள்.அவர்கள் அதைச் சூழ்ந்து ஆழச் சிந்திக்கின்றனர்.அப்பொழுது அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள். அப்பொழுது தாமும் அவர்களின் மனதோடு இருந்து அருட்பிரசாதமாய் பொழிந்து மகிழ்கின்றாள் அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே. இயங்குதற்கு சக்தி தேவை. உலகம் இயங்குவற்கு இறைவனது ஒரு பங்கிலுறைந்து இருக்கிறாள், ஆதி சக்தியான அம்மை. இவள் ''கடவுளார் யாவர்க்கும் மேலையிறைவி'' ஆவாள்;''புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம்''; ''சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்குபவள்''; ''இவள் எல்லா உலகங்களுக்கும் நாயகி'';''நான்முகி,நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை,மாதங்கி'' --என்றெல்லாம் துதிக்கப்படுவள். இவளுடைய ''தாமம் கடம்பு; படை பஞ்ச பாணம்;தனு -கரும்பு''. இவளை அடியார்கள் ''பயிரவி;பஞ்சமி;பாசாங்குசை; பஞ்சபாணி; சண்டி,காளி; வயிரவி; மண்டலி;சூலி; வாராகி; என்று ஏத்துவர்.காரணம்,உலக வேதம் உலகமொழிகள் அனைத்திற்கும் அனாதியாயும்,ஆதியாயும் அமைந்திருக்கின்ற ஓங்காரவடிவத்தோடுங் கூடிய எல்லாப் பிரபஞ்சங்களையும் ஈர்த்துக்கொண்டு அசைவறக்கிடப்பது சிவதத்துவம் என்னும் அற்புதம். அந்த அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.இந்த ஆதிசக்தி வடிவம் பரபிரம்மாகிய சிவனின்று பிரிக்க முடியாத்தாய் அக்கினியிற் சூடு போலும்,வெளியாகவும் மறைவாகவும் அதனோடு ஒடுங்கி உறைந்து நிற்பது. திரிபற்ற நிலையை இரண்டற்ற நிலை, அர்த்தநாகரீச்சுர நிலை சிவசக்தி என்பார்கள் சான்றோர்கள்.சக்தியின் தத்துவம்சக்தியின் தத்துவம்இந்த ஆதிசக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத்தனியாக பிரிக்க முடியாது என்றாலும், உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு,துடிப்பு,சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது அந்த ஆதி சக்தி.அதனால்,சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல், காத்தல், அழித்தல் என்னும், முத்தொழிலில் செய்ய முயல்கிறது.அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியை படைத்துக்கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுதுதான் எல்லா இயக்கங்களும் நடைபெறும்.சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும்,நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும், தெளிவற்றதற்கு தெளிவும், நிலையற்றதற்கு நிலையும் உண்டாகின்றன. அதனால், அருட்பிழம்பாகிய ஆதிசக்தி அந்தப் பராசக்தியின் உருவிலிருந்து,பிராஹ்மி,மகேஸ்வரி,கெளமாரி,வைஷ்ணவி,வாரகி,சாமுண்டி,துர்க்காதேவி, ருத்திர காளி என அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள்.இந்த சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா அற்புத செயல்களைச் செய்கின்றன.எல்லா உயிர்களுக்கும் ஓங்கார பிரணவம் எப்படி அமந்திருக்கின்றதோ,எல்லா அசைவிற்கும் எல்லாத் துடிப்பிற்கும்,எல்லா இயக்கங்களுக்கும் உறைவிடமாக, ஹ்ரீங்கார பிரணவம் அமைந்திருக்கிறதென எல்லா வேதாந்த,சித்தாந்த அருள் நிலைகளும், மகான்களும் முனிவர்களும்,மகரிஷிகளும் கூறியுள்ளனர்.நமது இந்து சமயம் ஆதிச்சமயம் இந்து வேதம் ஆதிவேதம். அதில் சொல்லாதது ஒன்றுமில்லை. அது பழமைக்குப் பழமையாயும்,புதுமைக்குப் புதுமையாயும்,விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானமாயும்,மெய்ஞ்ஞானத்திற்கு மெய்ஞ்ஞானமாயும் நடைமுறைக்கேற்றவாறு அமைந்து இருக்கிறது. அந்த வேதத்தை நன்கு ஆராய்ந்த அனுபவித்த, மாகபண்டிதர்கள், வேதரிஷிகள், சித்தகள் யாவரும் இந்த ஆதிசக்தி இலட்சணங்களைப்பற்றி கூறும் பொழுது,இந்த மகாசக்தி, மூலாதாரத்தில் தீப்பிழம்பாகவும் இருதயத்தில் ஞாயிறு ஒளியாகவும், நெற்றி உச்சியில் பூரண சந்திரனாகவும் காட்சி தருகிறாள்.மேலும்,மந்திரத்தில் மந்திர சக்தியாகவும், குருவில் குரு குருசக்தியாவும்,பிரமத்தில் பிரம சக்தியாவும், விஷ்ணுவில் விஷ்ணு சக்தியாவும்,சிவத்தில் சிவசக்தியாவும், இசையிலும்-நடனத்தில்,பாடலிலும் எல்லா கலைகளிலும் இன்ப வடிவ சக்தியாவும்- மகாசக்தியாவும் அமைந்துள்ளாள். இதனை தாயுமானார் :-- எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே எல்லா முன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீயெனச் சொல்லும் இயல் பென்றிருக்க ஆதி வேத மெல்லாம். சர்வ அகிலத்திலும் அறுபத்து நான்கு கலையாய் இருப்பவள் அவளே.அவனன்றி அணுவும் அசையாது என்கிறது அனுபவ உலகம். என்றாலும் அவளன்றி அவன் அசையவே மாட்டான் என்கிறது ஆதிவேதம். இச்சக்தியே முச்சக்தியாக வடிவெடுக்கிறாள்.சதவ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும்,இராஜோத குணத்தில் வீரஉருவத்தில் துர்க்கையாகவும்,தமோகுணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறை-களிலும் பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில் உறைகிறாள். இந்த முச்சக்திகளும் காரண காரியங்களுக்கேற்ப அவ்வடிவங்கள் ஒன்பது சக்தியாக[நவசக்தி] மாறி நவராத்திரி நாயகியாக பூசனை செய்து அருள்பெற்று மகிழ்கிறோம்.அட்சரங்கள்,ஆதி ஒலி எழுத்துக்கள் ஐம்பத்தொன்று.எனவே அம்பாளுக்கு ஐம்பத்தொரு பீடங்களை உண்டாகினார்கள். அவற்றுள் இன்றும் சிறந்து இருப்பது காமரூபம், காசி,நேபாளம், கேதாரம்,உஜ்ஜயினி,பிரயாகை, காமகோடி. இவைகள் பேரருள்மிக்க ஏழு சக்தி பீடங்களாக இருக்கின்றன.எனவே இப்பிரபஞ்சத்தாருக்கு பயம்,நயம் என்னும் இருவிதத்திலும் ஓயாது அருள் பாலிக்கும் மகா சக்தி கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கிறாள்.இவளை வணங்குவோர் இரக்கமும் நயமும்,நலமும்,நற்சிந்தையும், அறச்சார்பும் பெற்று விளங்குவார்கள்.உண்மை மனத்தோடு தாயை வணங்கினால் ''தாயறியும் கன்றின் நிலை'' என்று நிலையும் நாம் பெறலாம்.''வேண்டத்தக்கது எதுவோ நீ அறிவாய்'’மெய்யன்பர்களிடம் அவர்களின் மனத்தகத்தே இருந்து நன்னோக்கம், நல்லுணர்வு தன்மைகளை எழுப்புகிறாள். அன்பர்கள் அதை சூழ்ந்து ஆழச் சிந்திக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள்.அதைப் பிடித்துக்கொண்டு அவ்வுருவினை வெளிக்கொணர அன்பர்கள் படாது பாடுபடுகிறார்கள். இடையில் இந்த நவீன உலகத்தில் பல இடைபாடுகள்,இடையூறுகளுக்கு ஆட்படுகிறார்கள்.அவற்றைத் தமது அருளால் நீக்குயருள்கிறாள்.அவர்கள் எண்ணியபடி எண்ணம் நிறைவேறுகிறது.அன்பர்கள் யாவரும் மன மகிழ்கிறார்கள்.

<> தசரா<>

தசம் என்றால் பத்து தசரா என்றால் பத்து நாள்கள்
கொண்டாடக்கூடிய விழா. இவ்விழாபுரட்டாசி மாதம்
அமாவாசைக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது.
பொதுவாகப் புரட்டாசி மாதம் பெண் தெய்வங்களின்
வழிபாட்டுக்குரிய மாதமாகும். ஐப்பசி அஷ்டமி
துர்காஷ்டமியாகவும், நவமி ஆ யுத பூஜையாகவும்,
தசமி விஜயதசமியாகவும், ஐப்பசி மாத அமாவாசை
தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

வளர்பிறை திதியில் இந்த அஷ்டமி, நவமி, தசமி மூன்றும்
முக்கியமானவை. இந்த சமயத்தில் 10 நாட்களுக்கு தசரா
பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள்
கொண்டாடப்படுகிற இப் பண்டிகையின் கடைசி
மூன்று நாள்கள் அதாவது அஷ்டமி, நவமி, தசமி
மிக மிக முக்கிய நாட்களாகும். அஷ்டம் என்றால்
எட்டு. துர்க்காய அஷ்டமி என்றால் துர்க்கை
அம்மனை வழிபடுகிறவர்கள் துர்காய அஷ்டமி
அன்று துர்க்கை அம்மன் எல்லாவிதமான தீய
சக்திகளையும் அழிப்பதாக நம்புகிறார்கள்.

நவமி. நவம் என்றால் ஒன்பது. எல்லாவிதமான
தொழிற்கருவிகளுக்கும், ஆயுதங்களுக்கும் உகந்த
நாள் என்பதால் அன்று ஆ யுதங்களைக் கடவுள்
முன் வைத்துப் பூஜை செய்து யுத பூஜையாகக்
கொண்டாடப்படுகிறது.தசமி. தசம் என்றால் பத்து.

விஜயதசமி அதாவது வளர்பிறை தசமி இது பலவித வெற்றிகளைத் தரக்கூடிய நாளாகும். பொதுவாக அஷ்டமி, நவமி, தசமியில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு யோசிப்பவர்கள் இந்த ஐப்பசி மாதம் வளர்பிறை நாள்களில் வரும் இந்த மூன்று நாள்களை மட்டும் சிறந்த நாளாகக் கருதுகிறார்கள். இந்த பத்தாம் நாளான தசமி அன்று எல்லாவிதமான பெண் தெய்வங்களின் அம்சங்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஒரே அம்பாளாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளை வியாபாரம் தொடங்குவதற்கும், அலுவலகங்களில் புதுக்கணக்கு தொடங்குவதற்கும் உகந்ததாகக் கருதுகிறார்கள். இந்தப் பத்தாவது நாள் விழா அகில இந்திய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இதில் கல்கத்தாவில் காளிகோவில் வழிபாடு மிக மிக விசேஷம். இங்கு அஷ்டமி, நவமி, தசமி இவைகளுக்கு ஏழு நாள்களுக்கு முன்னதாகவே இவ்விழா ஆ ரம்பித்து விடுகிறது. இருப்பினும் இந்தக் கடைசி மூன்று நாள்களும் முக்கியமான நாள்களாகும். மூன்று நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு பெரிய பெரிய பந்தல்கள், தோரணங்கள், வாணவேடிக்கைகள், அம்மன் புறப்பாடு , இரவு கச்சேரி என்று கோலாகாலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், வங்காளம்தேசம், மைசூரிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதில் மைசூரில் மிக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மைசூர் மகராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்து நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு பத்து நாள்களுமே அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, மஹாராஜாவே முன்னின்று நடத்துவதால் மக்கள் கூட்டம் பெரிய அளவில் கூடி அம்மன் புறப்பாடு , கச்சேரி, ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்கிறார்கள். ஒரு காலத்தில் மைசூருக்கு இணையாகத் தமிழ்நாட்டில் உள்ள பாளையங்கோட்டையிலும் அதனருகில் உள்ள குணசேகரப்பட்டினத்திலும் புகழ்பெற்ற விழாவாக, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகிழ்கிற விழாவாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, அதன் வேகம் குறைந்து சாதாரண ஆ யுத பூஜையாகவே கொண்டாடப்படுகிறது. தேவிக்கு மிகவும் விருப்பமானது நவராத்திரிப் பெருவிழா ஒன்றுதான். இவ்விழா வழிபாட்டில் அனைத்துமே தேவி மயம்தான். அன்னையானவள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடையவள். இதை உலகுக்கு உணர்த்தவே இந்த நவராத்திரி வழிபாடு.இந்த வழிபாட்டினை சிலர் ஒன்பது நாளும் பகல் நேரத்தில் செய்வார்கள். வேறு சிலரோ இரவு நேரங்களில் மட்டும் அன்னையைப் பூஜிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் சாரதா நவராத்திரி மிக விசேஷமானது. நவராத்திரி ஒன்பது நாட்களும் பகலில் தேவி பாகவதத்தினைப் பாராயணம் செய்தல் நல்லது. மாலையில் விளக்கேற்றி வைத்து அம்மனைக் குறித்த பாடல்கள் பாடுவதும் நன்மையை உண்டாக்கும். நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான கலவை சாதம், ஒன்பது விதமான பூ வகைகள், ஒன்பது வித பட்சணங்கள், ஒன்பது கன்னிப் பெண்களுக்கு மங்கல திரவியங்கள், ஆடை, அணிமணிகள் கொடுப்பதும் கூட வழக்கம்தான். அன்னைக்கு உகந்த பழங்கள்:மா, பலா, வாழை, கொய்யா, நாவல், நாரணம், மாதுளை, பேரீச்சை, இளநீர் போன்றவை நிவேதனப் பொருள்கள்:சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், வெண்பொங்கல், பலவிதமான காய்கறிகளுடன் கூடிய சாம்பார்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆ கியவை. விசேஷமான சக்தி பீடங்கள் 9பார்வதியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்கவில்லை. அவனுக்குத் தர வேண்டிய அவிர் பாகத்தையும் தரவில்லை என்பதால் கோபம் கொண்ட பார்வதி, கணவனின் சொல்லை மீறி தட்சன் யாகம் நடத்தும் இடத்துக்கு நியாயம் கேட்கச் செல்லுகிறாள். தட்சனோ மகளென்றும் பாராமல் பார்வதியை அவமதிக்கிறான். அதனால், வெகுண்ட பார்வதி, யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். உக்கிர மூர்த்தியான சிவனோ, இறந்து போன சதி பார்வதியின் உடலை எடுத்துக் கொண்டு மூவுலகங்களையும் அதி உக்கிரத்துடன் ஆ டச் செய்தார். அந்த நேரத்தில் மகா விஷ்ணு, கோபத்தின் வயப்பட்டு ஆ டும் சிவபெருமானின் கரங்களிலிருந்த பார்வதிதேவியின் சவத்தைத் தன் சக்ராயுதத்தால் பல துண்டங்களாக்கி பல திசைகளிலும் வீசி எறிந்தார். அவ்விதமாக உடலின் துண்டுகள் விழுந்த இடங்களை சக்தி பீடங்கள் என்கிறோம். சக்தி பீடங்கள் மொத்தம் 51.அவற்றுள் முக்கியமானவை ஒன்பது. 1. சிறீ நைனா தேவி - இமயமலைப் பகுதியில் சதியின் இரு கண்கள் விழுந்த இடம். 2. சிறீ சிந்த்த பூர்ணா தேவி - பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம். 3. சிறீ ஜ்வாலாமுகி - நாக்கு விழுந்த இடம். ஜ்வாலாமுகி சன்னிதியில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. இங்கு ஜோதி வடிவாக அம்பாள் காட்சி தருகிறாள். 4. சிறீ வஜ்ரேஷ்வரி - மார்பகங்கள் விழுந்த இடம். 5. சிறீ வைஷ்ணோ தேவி - சதியின் ஒரு புஜம் விழுந்த இடம். 6. சிறீ சாமுண்டா தேவி - இங்கு சதியின் உடல் பகுதி எதுவும் விழவில்லை. ஆனால், அன்னை சண்ட, முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம். 7. சிறீ மானஸா தேவி - சதியின் தலை விழுந்த இடம். 8. சிறீ ஷாகும்பரி தேவி - தலையின் நெற்றிப்பகுதி விழுந்த இடம். 9. சிறீ காலிகாஜி - சதியின் கூந்தல் விழுந்த இடம். இதனை சக்தி பீடமாக எடுத்துக் கொள்வதில்லைஎன்றாலும், மிகப் புனிதமான மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

<> சித்தர்கள்<>

முதலில் சித்தர்கள் ' காடே திரிந்தென்ன' 'கந்தையே உடுத்தென்ன''
ஒடே எடுத்தென்ன ' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும்-நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும்
அவர்கள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர்.மேலும் கோயில் வழிபாட்டு,
வேள்விகள், சாத்திரங்கள் ஓதுதல் போன்றவற்றைச் சாடியும்
மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைக் கண்டித்திருப்பதும்
அவர்களுக்கு சமுதாயத்தின் மேல் இருந்த ஈடுபட்டைக்
குறிக்கிறது.

அகத்தில் கண்கொண்டு ஆண்டவனை உள்ளத்தில் கண்டு மகிழ்வதே உண்மையான பேரானந்தம் எனக்கருதி வாழ்ந்தனர். ஊனுடம்பாகிய ஆலயத்தில் உள்ளமாகிய பெருங் கோயில் சிவனைக் கண்டு தெள்ளத்தெளிந்திருக்க வேண்டும் என வற்புறுத்தினர். தனி மனிதன்கள் அனைவரும் அக நாட்டம் கொண்டு , புற வழிப்பாட்டை வெறுத்து வாழ்ந்தால் சமுதாயம் ஏற்றத்தாழ்வு அற்றதாகிவிடும் என்பதை உணர்ந்தனர். என்னுள்ளே இருக்கும் ஆண்டவன்தான் பிற மனிதர்களிடமும் உறைகிறான் என்ற உணர்வு ஏற்படின் அனுபவ ரீதியாக அனைவரும் சமம் என்ற உண்மை புலப்படும்.நம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும் அவனை அவன் துணையின்ற அறிய முடியாது. சூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்துக் கொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன் அருளினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.இறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவதுசித்து.! இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் தாங்கள் இறை அனுபவத்தைப் பெற்றதுடன் மக்களும் தாங்கள்பெற்ற இறை அனுபவத்தைப் பெறுவதற்காகத் தங்கள் இறை அனுபவங்களை எல்லாம்பாடி வைத்தார்கள்.சித்தர்கள் தம் உள் இருக்கும் இறைவனை உணர்ந்தவர்கள். அதனால்சமயம், சடங்கு முதலியவற்றைக் கடந்து நிற்கிறார்கள். அன்பும் அருளும் நிறைந்தவர்கள்.அதன் காரணமாக மனிதர்களின் முன்னேற்றம் ஒன்றையே கருத்தில் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே தாங்கள் பெற்ற அருளை வழங்கி வருகிறார்கள்.உலகில் மற்ற எந்தப் பகுதிகளையும் விட இந்தியாவில்தான் ஏராளமானசித்தர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்தமிழ் நாட்டில் திருமூலரில் இருந்து இந்தச் சித்தர் பரம்பரை நீண்டுக்கொண்டே இருக்கிறது.இறைவனைத் தம் உள்ளத்தில் கண்ட சித்தர்களைக் காலவரை அறைக்குள்அடக்கிவிட முடியாது. அவர்கள் பல நூறு ஆண்டுகள் கூட வாழக்கூடியவர்கள்.சித்தர்களைப்பற்றிய உண்மையைப் புரிந்ததுகொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்கள் புரிந்துக் கொள்ளவது சற்று சிரம்மம் ஆனாலும், எல்லையற்ற ஆற்றலைப் பெற்ற சித்தர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.சித்தர்கள் ஆழ்ந்த தெய்வ பக்தி நிரம்பியவர்கள். ஆயங்கள் அனைத்தும் புற வடிவில் ஆண்டவனைக் கண்டு வழிபட எழுந்தவை. பூசைகளுக்கு தடங்கல் ஏற்பட்டால் வளம் குன்றி, மன்னவர்களூக்கு தீங்கு ஏற்பட்டு கன்னங்களவுகள் மிகுந்திடும் என்பார் திருமூலர் எனவே ஆலய வழிபாடு அவசியம். ஆகவே சித்தர்கள் மானிட ஆன்மாக்கள் செம்மையுறலயங்கள் அமைத்து சிவசமாதி பெற்று அருவமாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.உடம்பின் நுட்பங்கள், இயல்புகள், மனதின் தன்மைகள், தாரங்கள், காயசித்தி, உபாயங்கள், வைத்தியம் முறைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது சித்தர்கள் தங்களது பாடல் வாயிலாக சமுதாயத்தில் மக்கள் " மெய்யுணர்வு " அல்லது " மெய்யறிவு " பெற்றுத்திகழ வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தனர். எந்தச் சமுதாயத்தில் மெய்யுணர்வு பெற்ற 'மேன்மக்கள்' அதிகம் உள்ளரோ அச்சமுதாயம் சீர்மைபெறும் என நம்பினர். உடல் தத்துவம், மனத்தத்துவம் விஞ்ஞான தத்துவம், மெய்யானதத்துவம் ஆகிய யோக நெறிமூலம் பாதுகாக்கப்பட்டன." இந்த உடம்புள்ளே தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடம்புனுள்ளே வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்"" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதே சித்தர் இலக்கியத்தின் அடிப்படை உண்மை.சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் எனவும் எண்ணிய காரியத்தில் ' சித்தி ‘ அதாவது வெற்றி பெற்றவர்கள். தம் உயரிய பண்பினால் சித்தனாம் இறைவனைக் கண்டு இரண்டறக் கலந்தவர்கள். இச் சித்தர்களின் செயல்களிற் சிலர், மந்திரத்தினால் விளைவதைப் போன்று தோன்றினாலும், அவர்கள் மந்திரம், தந்திரம், மாயை ஆ கியவற்றினைப் பயில்பவரோ , கடைப்பிடிப்பவரோ அல்லர். தன் ஆ ன்மீக வளர்ச்சியினால் அறிவியல் சாதனைப் புரிந்த இச்சித்தர்களை அறிவியலுக்கும், ஆ ன்மீகத்திற்கும் அமைந்த பாலங்கள் எனக் கூறுவது பொருந்தும்.சித்தர்கள் சாதி பேதங்களை வன்மையாக கண்டித்தனர். அகப்பேய்ச்சித்தர்" சாதிபேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே " என்று கூறுவதன் மூலம் இறைவனை தன்னுள்ளே கண்டவர்க்கு சாதிபேதம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்." எவ்வகையாக நன்னீதி- அவைஎல்லாம் அறிந்தே எடுத்து நீ போதிஒவ்வா வென்ற பல சாதி- யாவும்ஒன்றென்று அறிந்தே யுணர்ந்ததுற வோதி..." என்பார்." கஞ்சாப் புகை பிடியாதே - வெறிகாட்டி மயங்கிய கட்குடியாதே...! "அஞ்சவுயிர் மடியாதே - பத்திஅற்ற அஞ்ஞானத்தில் நூல் படியாதே ..." என்றும்.பட்டினத்தார்," பொய்யை ஒழியாய்ப், புலாலை விடாய் காளத்திஐயரை எண்ணாய்; அறம் செவ்யாய் - வெய்யசினமே ஒழியாய்; திருவெழுத்தைந்தும் ஓதாய்;மனமே உன்ககென்ன மாண்பு...! என்று பாடுவதிலிருந்து தனி மனித அறனை வலியுறுத்துகிற பாங்கு புலப்படுகிறது. அறம் ஓங்கும் போது சமூகம் மேன்மையடைகிறது.மருத்துவ நூல், புவி நூல்,கணித நூல்,மந்திர நூல், யோக நூல்,சோதிட நூல் எனப் பல தனி நூல்களை எழுதியமை போன்று சமுதாய நூல் எனத தனி நூல் எழுதவில்லை எனினும், எல்லாச் சித்தர் பாடல்களிலும் சமுதாயம் செம்மைப்பட வேண்டும் என்ற உரிய நோக்கம் பிரதிபலிப்பதைக் காணலாம். சான்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.தேடுகின்ற புராண மெல்லாம் பொய்யே யென்றேன்சிவன்பிரமன் விஷ்ணுவின் பெயர்களென்றேன்டுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்அகஸ்தியர் சூத்தி¢ரம் :30மூகருடன் பழகாதே பொய் சொல்லாதேபின்னே நீதிரியாதே பிணங்கிடாதேபேசாதே யருவருக்கு மிந்த நூலை- நந்தீஸ்வரர் சூத்திரம் :100கள்ளனென்ற சீடரை நான் தள்ளச் சொன்னேன்பொய்யான பொய்யுரைக்கும் புலை சண்டாளன் பொருளீந்து பிறர்க்குரைக்கும் பாவச்சீடர்ஐயாவென்ற அடுத்தாலும் தள்ளச் சொன்னேன்அஞ்ஞானி யாவர்களுடன் பேச்சொன்னாதே- தட்சணாமூர்த்தி பூரண பூசாவிதி 200தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்வந்தவழி அறியார்க்கு மந்தரமேது- ஞானவெட்டியான் 1500சமுதாயத்தில் காணப்படும் பயனற்ற பொருளற்ற , சாதி, சாத்திரம், சடங்கு, சமயம், போன்ற பாகுபாடுகளை அஞ்சாமல் சாடியவர்கள் சித்தர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரது அரிய கொள்கையின் உண்மையை உணர்ந்தவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். ராமலிங்கசுவாமிகள் ஆ ன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை என்னும் தொடரால் அதனை விளக்குகிறார். சாதி - சாதிக்குள் சாதி -எனத் தம்மைத் தாமே பகுத்து, பகைமையையும் பிரிவினையும் வளர்த்துக்கொண்டே காலத்தில் துணிந்து அவை பொய் எனச் சாடிய துணிவு குறிக்கத்தக்கது, மக்களைப் பிரிக்கும் மாயையாகிய அச்சாதியை ஒருமித்த குரலோடு சித்தர்கள் தாக்குகின்றார்கள்,இப்பிரிவினையை மிகுதிப்படுத்துவது சாத்திரமும் சடங்கும் ஆ கும். சாதினால் தீமையே அன்றி அணுவளவும் நன்மை இல்லை என்பது சித்தர்கள் கருத்து. " கண்மூடிப் பழக்க மெல்லாம் மண் மூடிப் போக " எனப் பெரிதும் வருந்தி சாடியவர் இராமலிங்க சுவாமிகள். சித்தர் சமுதாயத்திற்க்கு செய்த மிகப்பெரிய தொண்டு ஒன்று என்றால் அது கடவுள் பற்றிய கொள்கையை ஆ லயங்களில் மட்டும் இறைவன் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்த காலத்தில்- கண் மூடித்தனமான சம்பிரதாயங்களில் தமது பொழுதையும் ,பொருளையும் விரயம் செய்து வந்த காலத்தில் மிக அரிய கொள்கையை உலகுக்கு உணர்த்தினார்கள். மலை, கடல், முதலியவற்றால் பிரிக்கப்பட்ட மனிதன் , மேலும் தனக்குள் சாதி, சடங்கு முதலியவற்றால் பிரித்துக் கொண்டான். இப்பிரிவினைக்கு உரம் ஊட்டுவது போல் கடவுட் கொள்கை சமயமும், சேர்த்துகொண்டான். '" உங்கள் தெய்வம் ,எங்கள் தெய்வம் என்று கருதிக் கருத்து வேறுபாடுகளைப் பகுத்துக் கொள்ளுகின்ற பாதர்களை தெய்வம் எங்கும் உண்டு " எனச் சாடுகின்றார்.தனை தனது ஞானவெட்டியான் 1500 என்னும் நூலில் :" உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "- ஞானவெட்டியான் பாடல் 616" ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "- பட்டினத்தார் பாடல் :30" ஒருவனென்றே தெய்வத்வதை வணங்க வேணும்உத்தமனாய்ப் பூமிதனி லிருக்க வேணும்- பட்டினத்தார் பாடல் 68கட்டோடே கனத்தேடே வாழ்ந்து , பட்டோடே பணியோடே திரிந்து , கொட்டோடே முழக்கோடேகோலங்கண்டு, பண்ணாத தீமைகள் பண்ணி ,பகராத வன்மொழிகள் பகர்ந்து , நண்ணாத தீயினம் நண்ணி, நடவாத நடத்தை நடந்து ,உள்ளன்று வைத்து புறமொன்றுப் பேசித் திரிவார்; ஆ லயம் சென்று புற அபிசேகம் செய்தல், பாவம் போக்கும் என்று வந்தனர்- வருகின்றனர்.இத்தகையோரைப் பார்த்துப் பாடுவதே இவ்வறிவுரைப் பாடல்கள்பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப்பனி மலர் எடுக்கமனமும் நண்ணேன் எனத் தாயுமானார் பாடுவதுவதும்"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"என இராமலிங்க சுவாமிகள் பாடியது போலவும், மனம் செம்மைப் படுவதேஉயரிய வழிபாடு கும். " மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " எனத் திருமூலர் கூறுவதைக் காணலாம்.எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் , பொதுவாகச் சீர்திருத்தம் பேசியவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் அரசியலோடு தொடர்பு கொண்டவர்களாவே விளங்குகின்றனர்ஆனால், சித்தர்கள் அவ்விதிக்கு விலக்காவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மனிதரில் சிலருக்கு இருக்கும் பலவீனமான நம்பிக்கையைப் பயன்படுத்திச் சிலர்சமய துறையில் இருந்துகொண்டு பயன்படுத்திக் கொண்டு வயிற்றையும், பொருளையும் பெருக்கி வருகிறார்கள். அத்தகையயோர் எக்காலத்தும் இருப்பார்கள் போலும். இவர்களைச் சாடிப் பாடும் பாடல்கள் சில,போலிகளைச் சாடி சித்தர்கள் பாடிய சில பாடல்கள் :-பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவிபணம்பறிக்க உத்தேசம் பகர்வோ என்பான்ரப்பா பிரமநிலை காட்டா மற்றான்காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்நேர்ப்பா சீடனுக்குப் பாவமாச்சுநிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சுவீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்விதிபோல முடிந்ததென்று விளம்புவானே..சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.இத்தகைய போலித் துறவிகளின் மாய வித்தைக்கண்டு மனதைப் பறிகொடுக்க வேண்டாம் என்பதே சித்தர்களது அறிவுறுத்தல். இத்தகைய வேடதாரிகளை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக மெய்ஞ்ஞானிகளின் இலக்கணத்தைக் கூறுகிறார் பட்டினத்தார்.பேய்போல திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கைரைத்தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிசேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரேபத்திரகிரியாரும், சிவவாக்கியரும் ஏற்க்குறைய ஒத்த கருத்துக்களை கூறிகிறார்கள். எத்துணை உயர்ந்த நிலை இது.! அனைத்தும் அடங்கிய நிலை அன்றோ இது ! இத்தகையாரே தூய துறவிகள் அவர்கள் சமுதாயம் உய்யும் , போலித் துறவிகளைப் பின்பற்றுவதால் அழிவு நேரும் என்கிறார் திருமூலர்:குடுடும் குருடும் குருட்டுட்டம் டிகுருடும் குருடும் குழிவிழு மாறே -திருமந்திரம் 1652.என்பது பாடல். " வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்றும் கருத்து வேதமும் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு மக்கள் உள்ளார்கள். ஆதியிலே அதனை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இன்னும் பலர் விடை காணவில்லை.நாமும் உண்மையை உணராது - உணர முயலாது சாதிலும், மதங்களிலும் சமய நெறிகளிலும்,சாத்திர சந்தடிகளிலும், கோத்திரச் சண்டையிலும் அலைந்தலைந்து வீண் போகின்றோம்.தமிழ் புலவர்களும், அறிஞர்களும் தம் இலக்கியங்களில் வாய்ப்பு நேரும்போதெல்லாம் தமிழை போற்றினர், வளர்த்தனர், மேன்மையுற செய்தனர்.சித்தர்கள் தாமரை இலை நீராக சமுதாயத்தில் இருந்தாலும், பற்றற்றவர்களாக இருந்தாலும் மொழி உணர்வு நீங்காமல் வாழ்ந்தனர் என்பதை அவர் தம் பாடல் வழி, நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது." முத்தி தருபவன் அவனே ; முத்தியாய் விளங்குபவனும் அவனே ;ஞானம் தருபவன்அவனே ; ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன்,தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்."முத்தியை ஞானத்தை முத்தமிழ ஓசையைஎத்தனை காலமும் ஏத்துவர் ஈசனைநெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார். :" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்." அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "ஞானவெட்டியான்"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்குவந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்தேவியென்னும் பூரணியே சீர் அகஸ்தியர் ஞானம் 100பொதிகை மேவு மகத்தீர ராலெனதுபோத ¡த்தமிழ் வாக்கியம் - ஞான வெட்டியான் 1500கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவது கும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.விழுமிய கருத்துக்களை கூறுவனவாக இருப்பினும் சித்தர் இலக்கியங்களில் மற்ற இலக்கியங்களைப் போலவே சொல், பொருள், நயம் மிகுதியாக காணலாம்.முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் . இச் சொல்லாட்சி வைத்துப் பட்டினத்தார் சுவையான பாடல் ஒன்றினைக் காண்போம்." முதற்சங்கம் அமுதூட்டும் மொகுழலார் இசைநடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்.மனித வாழ்வில் மூன்று நிலை முக்கியமானது. குழவி பருவம்,வாலிப பருவம், முதுமைப் பருவம் என்பன. இம் மூன்று பருவங்களும் வாழ்க்¨யின் திருப்பு முனைகளாகும்.குழவி பருவம் வாலிபப் பருவத்திற்கும், வாலிபப் பருவம் முதுமைப் பருவத்திற்கும் முதுமைப் பருவம் மரணத்திற்கும் திருப்புமையாகும்.இம்மூன்று, நிலைகளிலும் சங்கம் [சங்கு] பெறுகிறது. குழவி பருவம் சங்கம் - அமுதூட்டும் வாலிபப் பருவத்தில்சங்கம் மணவிழாச் சின்னம் ; முதுமையின் சங்கம் மரணத்திற்கு சின்னம். எனவே இம்மூச்சங்கமும் முறையே தோற்ற வளர்ச்சி மறைவைக் குறிக்கிறது.சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களைபடைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ; மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ; கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ஆ னால் அவைகள் யாவும் இன்னும் 'பாழாய் பழங் கனவாய் ' தான் உள்ளது.சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது இலக்கியம்.மனம் பழுத்தால் பிறவி தங்கம் -மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே - தங்க இடம் பாரப்பா....இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக.

<>சமய வளர்ச்சி <>

தர்மம் , சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல
சாத்தியங்களை உண்டாக்கலாம் ; உருவாக்கலாம் ; சாதனை
புரியலாம்.ஒரு துறையில் மட்டுமல்ல ; பல துறைகளில்,
நாம் நமது ஒன்றுமையைக்கட்டிக் காக்கலாம். கல்வி,
கலாச்சாரம் , பாரம்பரிய சம்பிரதாங்களையும் போற்றிப்
பேணலாம்.

இதனால் எண்ணியவைகளைக் கனவாகாமல் முடிக்கலாம்.
இதனால் திண்ணியவராகப் பெறலாம்.'' இறைவன் மீது
நம்பிக்கை வைத்தல் '' என்பது நாட்டின் அறக்கோட்பாடுகளில் தலையாயனது.'' சமூகம் '' சிறுபான்மையினர் எனினும்
அவரவர் சமய வழிபாட்டுக்குச் சுகந்திரம் உண்டு. மரபுடன்
சமரச சன்மார்க்கம் கண்ட பரம்பரை நம் இந்திய சமூகம்.

''சநாதன தர்மம் " என்ற சிறப்பும் இந்து சமயத்திற்கு உண்டு.

" சிறப்புக்குரிய " சிறிய சமூகத்திற்க்கு உள்ள சமயச் சிறப்புக்கு
இந்துக்கள் ஆற்றும் ஆற்றக் கூடிய சாத்தியம் என்ன ?
இளையர்களை எப்படி இணைக்கலாம் அவர்களை சமயத்தின்
பால் ஆர்வம் கொள்ளவது எப்படி ? இதனை காலத்தையட்டிச்
சிந்திக்க வேண்டும்.காலமெல்லாம் என்ற கேள்விக் குறியில்
நில்லாது அல்லது இல்லாது சமயம் காத்து , நம்மையும் காத்து ,
நடப்பில் காலத்தையும் கணித்து வாழத்தெரியக் கூடிய நடை
முறைச் சாத்தியங்களைச் சமயத்தின் வளர்ச்சி வழியில்
காணவேண்டும் என்பதே நமது அவா!

பேதங்களை அகற்றி , இந்து சமய வழியில் யாவரும்
ஒன்றிணையலாம். இணைய வைக்க '" மார்க்கம் " உண்டு.
அதற்கு மனம் வேண்டும். மனம் , சமய மணம் பரப்ப ,
விரிய வேண்டும். விரிவில் ' விரிசல் ' ஏற்படா¡து, மேல் -
கீழ் பார்க்காது , ஊனக் கண்ணை நீக்க வேண்டும் ;
ஞானக் கண்ணைத் திறக்கச் சமய ஞானம் ஒளி பெற
வேண்டும். இதற்கு " அடிப்படைச் சமய ஞானம் " என்ன என்பதை , இளமையிலிருந்தே ஊட்டப்பவும் வேண்டும்.நம் சமயத்தில் நடிப்பு , நடப்பாகலாகாது.ஆலயங்கள் , மன்றங்கள் யாவும் ஒன்று கூடி , ஒரு குடையின் கீழ்நின்று செயல்களை தீட்டிச் செம்மையாகச் செய்ய வேண்டும். சக்திகளைக் கணித்து அறிந்து, நம்மை நாமே மறு விமர்சனம் செய்து , எதிர்காலத்தில் வலிவு தரும் செயல் பாடுகளை ராயவேண்டும்.படித்தவர்களும் பாமரர்களும் , மாணவர்களும், இளையர்களும்சமய உணர்வில் ஒன்றிக்கும் சாத்தியக் கூறுகளையும் அறிய வேண்டும். நம் காலத்துடன் சமயம் போய்விடா¡து ; இளைய சந்ததிகளுக்கும் அதனைச் சிறப்புச் சொத்தா¡க விட்டு வைக்க வேண்டும். பயனுடைய சிறு அளவு செயல் ஆனாலும் எதிர்காலத்தில் அது விருச்சமாக விரியும். நாம் எதனைச் செய்தல் சாலும் என்பதை ஓர்தல் அவசியமாகிறது. பயனுடைய சொல்லைச் சொல்லுக ; செயலின் சிறு அளவிலேனும் கொள்ளுக என்பதை வேதமாக பெறலும் வேண்டும்.இங்குள்ள இந்து சமயத்தின் செயல் திறங்களை ஒன்று படுத்த, அதன் அடிப்படைகளைச் சரியான தளத்துடன் பேணப்பவேண்டும்.சமயம் நம் வாழ்க்கைக்கு அடிப்படை. மனப்பக்குவத்தை, அதற்கு மேல் வைக்கவேண்டும். குழம்பிய மனப்பான்மையில் சமயத்தை அணுகலாது. நம் சிறார்களுக்கு சமயத்தின் மேன்மை , உயர்வு, விஞ்ஞானத்தோடு இயைந்த சிறப்பு தன்மை , அடிப்படை இயல்பு தன்மை போதாதது. அல்லது அறவே இல்லை ! என்றும் கூறலாம். வீண் சர்ச்சைகளால் பயனில்லை. சமய ஞானம் உள்ளவர்கள் நம் சமூகத்திற்கு இதில் வழிகாட்டவேண்டும்.ஒரு இந்துவின் சமய வாழ்க்கைக்கு ஆலயம் அடிப்படை. வீட்டிலும்வணங்கலாம். ஆனால், ஆலயம் சென்று , ஆகம முறைப்படி வணங்குவதென்பது எதனால் என்பதை உணர்ந்து காரிய மாற்று செய்ய வேண்டும்.பிற சமயங்கள் , தாங்கள் வழிப்படும் ஆலயம் அல்லது தேவாலாயம், பள்ளிவாசல் , பெளத்த விகாரங்களின் வழி , தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ளவதைக் காணலாம். அந்த சாத்தியம் நமக்கும் உண்டு. ஆனால் நாம் அதனை செம்மையாக செயல்படுவதில்லை. நமது சமயத்தின் சாரத்தை , பெருமையை, கீர்த்தியினை அறிந்து மற்றவர்களுக்கும் எடுத்து இயம்ப வேண்டும்.சாதாரணமாக நான் எல்லா இடங்களிலும் , நாடுகளிலும் இதனைக் காண்கிறேன். ஒரு சாதாரண இந்து குழப்புகிறான்.இமயத்திலிருந்துக் கொண்டு , மடுவில் நிற்பவனைப் பார்த்து , என்னைப்போல் நீயும் உச்சிக்கு வா என்று வாயளவில் சொல்லாது , உச்சியிருப்பவர்கள் இறங்கி வந்து , தான் பெற்ற சமய இன்பத்தை அந்த பாமர இந்துக்கு காட்டி , உச்சிக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். அதுவே தர்மமாகும்.ஞானச்சுடரை ஏற்றக்கூடிய மையத்தைக் காட்டவேண்டும். இந்துசமயத் தத்துவத்தைப் படிப்படியாகப் படியும் வகையிலும் , புரியும் வகையிலும் , வகையும் தொகையும், நிலையும் நினைப்பையும் தெரிந்து , கொஞ்சம் கொஞ்சமாக ஞானத்தீபத்தினை ஏற்றப் பழக்க , பழக வேண்டும் - சமயம் தெரிந்தவர்கள் - சான்றோரகள்.சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், தென் ஆப்பிரிக்கா [டர்பன்]ஆகிய நாடுகளில் சில ஆலயங்களிலும் , மற்றும் சிலர் தனிபட்டவர்களும், நல்லவர்களும் வல்லவர்களும் ஆங்காங்கு ஆசிரியர்மார்களும் சிறார்களுக்கும் - சமய பேதனை செய்வதுடன் , மறவாது தமிழினையும் கற்று தருவதைக் காண்கிறேன். இந்த மனப்பக்குவத்தால் நாம் ஒன்றி இணையலாம்.இந்த மாற்றத்தினால் நம்மிடமும் பலம் உண்டு என்பதை அறியலாம்.எல்லா நாட்டிலும் மாற்றங்கள் மிக விரைவாக நடைபெறுகிறது. இதனை உணர்ந்து நம் சமய வழிபாட்டிலும் கமத்தின் அச்சாணிக்கு ஊறு ஏற்படாவண்ணம் ஒன்றிணைந்து செயல்படும் வழிமுறைகளை ராயவேண்டும்.இந்து தர்ம வாழ்வு , அவர்களுடைய வழிபாட்டில் முடியக் கூடியதல்ல ; ஆத்மவுடன் , அதை வளர்க்கக் கூடிய கல்விக்கும் , அதனைச் சார்ந்த கலைக்கும் கலாச்சாரப் பண்பாட்டிற்கும் , சிந்தனைக்கும் ஏன் பொருளாதாரச் சிந்தைனைக்கும் வாழ வழி காட்டும் அகிம்சா சிந்தைனைக்கும் கூட தேவையானதா¡கும். இதனை நம் இளையர்கள் சிந்திக்க வேண்டும்.இந்த வழிகளில் இந்து சமயத்தை அடி வேரிலிருந்து , நுனிக்கிளையிலுள்ள தளிர் வரைக்கும் இதன் சத்து பரவியிருக்கப் பார்த்துக் கொண்டால் , சமயம் காலவோட்டத்தில் அசைக்க முடியாத ஆணிவேரைப் பசுமையுடன் ஊன்றிவிடும் நம்பிக்கை உண்டு.நாடெங்கிலும் சமய சொற்பொழிவுகளை நடத்தலாம் ; கருத்தரங்குகூட்டலாம் ; சமய விழாக்களை நடத்தலாம்.இன்னும் மனமிருந்தால் எவ்வளவோ செய்யலாம். சிறுபான்மையோராக இருக்கும் நமக்கு - நமக்களிக்கப்பட்டிருக்கும்சமய வழிபாட்டுக்குரிய உரிமையைப் பயன் படுத்திக் கொண்டால், பயன் படுத்திக்கொள்ளுவதில்தான் எல்லாச் சிறப்பும் உண்டு.அதற்கு அடிப்படை போடுங்கள். சமயத்தின் வளர்ச்சிக்குச் சமூகம் செய்யக் கூடிய சாத்தியங்களை தொடங்குங்கள்.

<<>>சிரிப்பு<<>>

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது
கொண்டிருப்பீர்கள்.இன்று வாழ்வில் நாம் திரும்பிப்
பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.

அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை.
இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை.
உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின்
இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை
இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது.

கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக
உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.
காரணம், மன இறுக்கம், மன உழைச்சல். இந்த மன
புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு
சிரிப்பது. N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப்
பலரும் கேட்டு இருக்கலாம்.

சில சிரிப்புகளை சிறிது அலசுவோம். வாய்விட்டு
சிரிப்பது - நமட்டு சிரிப்பு - வாயை மூடிக்கொண்டு
சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்க சிரிப்புது - விழுந்து, விழுந்து சிரிப்புது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிரிப்பு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு* [விடுப்பட்ட சிரிப்பு இருந்ததால் தொ¢விக்கலாம்.] நகைச்சுவை என்பது சில சமயம் கேலி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலிசெய்ய, கேலி செய்வதற்கு பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும். சிரிப்பு ஆக்கபூர்வமமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்[சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.] சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம் ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது. நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு "CGRP" என்று பெயர். இதுதான் நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப 'CGRP' அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச்சிரிக்கும் போது 'CGRP' அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான் ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை. உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிரிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் 'ம்யூனோகுளோபுலின் ஏ' [IMMUNOGLOBULIN-A] என்ற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகா¢த்து பாக்டீயாக்கல், வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம். இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார் இந்தப் பேராசிரியர். மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு -சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பா¢ந்துரை செய்கிறார்கள். நேர்மன் கசின்ஸ்' என்னும் அமொ¢க்க நாவலாசியா¢யர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து மீண்டும் வந்தார் என்பதை குறிப்பிட்டுள்ளார். ''நான் மாரடைப்பு வந்ததுடன் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவித்தேன்.எளிய உடற் பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைச்சுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சா¢யம் ? நாளடைவில் என் இதயம் பலப்பட்டு நோய் இருந்த இடம் சுவடே தொ¢யாமல் மறைந்து போனது" நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச் 'சிரிப்பு' முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். சிரிப்பு பற்றி ஆராயும் மருத்துவ அறிஞர்களை ' GELOTO LOGIST என்கிறார்கள். இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள். சிரிப்பு நம்மிடைய ரத்ததில் அதிகப்படியான ஆ க்ஸஜன் இருப்பதற்கான தசைகள் வலுவடைகின்றன. ''இரத்த அழுத்தம்'' அளவு குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.'என்சீபேலின்ஸ்' என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு. சிரிப்பதனால் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகா¢க்கிறது. மன இறுக்கம் தளர்கிறது சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் - நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற இரைப்பைப் புண்கள் வராமலேயே தடுக்கிறது. உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள். "சிரிக்க தொ¢ந்த சமுதாய விலங்கு மனிதன்" என நம்மை மற்ற இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு.சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு. மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சிஎன பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு. நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. ''பெர்னாட்ஷ'' ஒரு சமயம். ''உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு பின்னணியிலேயே செயல்படுகிறது' என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுவதாக பெரும்பாலும் அமைகிறது. நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது என்பதை மெய்ப்பிக்க, நமக்கு அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக இருக்கிறது. அமரர் 'கல்கி' யின் படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான். இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம். நம்மில் சிலர்- பொ¢ய பதவியிலுள்ளவர்கள் 'சிரித்துப் பேசக் கூடாது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாறவேண்டும். நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினரிடம் அதிகம் நெருக்கத்தையும் எந்த விதமான இடர்பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது. சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு 'கவர்ந்திழுக்கக்' கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்,அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!! இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது. கண்ணுக்குள் தொ¢யமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. 'மர்ரெ பாங்க்ஸ்' என்ற தத்துவ டாக்டர், இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.? இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள். நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளையதலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது. நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மை பற்றி மற்றவர்கள்,''சாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு" என எண்ணக்கூடும். ஆகவே, அதனையும் கருத்தில் - கவனத்தில் கொண்டு சிரிக்கவும், மனம் விட்டு சிரிக்கவும். நலம் சிறக்கும்.

<>தமிழ் இலக்கியத்தில் சமபொறை <>

உலக மொழிகளுள் காலத்தால் வரையறுக்கப்படாதும்,
உயர்தனி மொழியாய் விளங்குவதும்,
இனிய நம் தமிழ்மொழியே ஆகும்.

தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியநூல்கள் பற்பல.
அவற்றில் சமயத் தொடர்பான இலக்கியங்கள், பல்வேறு
சமயப் புலவர்களால்காலந்தோறும் சமைக்கப்பட்டுள்ளன.
இப்பரந்த உலகிடைத் தோன்றிய மனிதன் தான் வாழும்
சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தான்.

அவற்றுள் சில நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. சிறப்பு
அடைந்துள்ள மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று.
சமய இலக்கியங்கள் நிரம்பிய சுந்தர மொழி. '' உலகம் என்பது
உயர்ந்தோர் மாட்டே...'' என்று தொல்காப்பியம் கூறும். சாதாரண
மனிதன் - உயர்ந்தவனாக சிறந்தவனாக மேம்பட்டவனாக ஆவதற்கு ஆவன செய்வது சமயம்.

அதோடு சமயத்தின் அறநெறி - உலக வாழ்க்கையோடு மத வாழ்க்கையும் அணைத்து மேற் செல்ல உய்கதி பெற வழி காட்டுகிறது. சமூகத்தில் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு ஆளாகிறான். அதற்குக் காரணமாக அமைவது சமயமே. சமயத்தினை சார்ந்து வாழ்பவன் ஆதலால் சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான். இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் மாறுகிறது. ஒவ்வொருவனும் கொள்கைவாதியாக மாறுவதால் ஒழுங்கான மனிதனைச் சமயம் உருவாக்கிக் காட்டுகின்றது. நமது சமயம் விஞ்ஞானத்தால் உணரமுடியாத மெய்ப்பொருளாகத் தனது மெய் ஞானத்தால் இனிது இயம்புகிறது. தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறை எனப் பெயர் பெற்றது. நமது சித்தாந்தம் அறிவியல் நோக்கில் மெய்ப் பொருளை நிலைநிறுத்தம் உண்மைகளின் முடிபு. அறிவால் உண்மைகளை பூவினுள் மணம் போல் கொண்டுள்ளது. '' அண்டப் பகுதியின் உண்டைப்பிறக்கம் அளப்பருந்தன்மை வளப் பெருங்காட்சி... '' என்று மாணிக்க வாசகர் கூறுகிறார். முன்னோர்களின் அனுபவத்தில் தோன்றிய நெறிகள் பின்னோரின் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டின.. சமயம் என்னும் சொல் பொருளுடையது. சமைத்துப் பக்குவப்படுத்தல் என்னும் பொருளில் சமயம் என்னும் சொல் தோன்றியது. கொள்கை, கோட்பாடு, குறிக்கோள் என்னும் பொருளில் சமயம் அமைந்தது. மனித வாழ்க்கைப் பயணத்திற்கு வழியாக அமையக்கூடிய காரண அடிப்படையில் நெறி, வழி கிய சொற்கள் அமைந்தன. சமுதாயக் கூட்டுவாழ்க்கைக்கு மனிதன் பண்படவேண்டும். தனி மனித வாழ்க்கையாகிய விலங்கு வாழ்க்கையிலிருந்து மனிதன்பண்படவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துக் காட்டிய நெறிகள் துணையாக அமைந்தன. உணவு பொருளை நேரடியாக உண்ணாமல் சமைத்த பிறகே அவற்றை அவித்து, வேகவைத்துச் உண்ணுகிறோம். அது போல் பக்குவமில்லாத - பண்பில்லாத விலங்காக வாழும் மனிதனைச் சமைத்துப் பக்குவப்படுத்த தோன்றியவை சமயம்.'' ஒன்றே குலம் ஒருவனே தேவன் '' என்பது திருமுலர் வாக்கு. மனிதன் தன் வாழ்வு வளம் பெறவும், மாக்கள் தன்மையிலிருந்து விடுதலை பெற்று ,மக்கள் தன்மை பெறவும் செய்யப்பட்டது.அதனை வேறு வகையில் சொன்னால் , மனிதனை பண்பாடு உடைவனாக ஆக்குவது சமயம்.அனைத்திற்கும் ஆணி வேராய் அமைந்த ஒன்றை அறிகிறான். அவ்வறிவுக்கு அப்பாற்பட்ட ஒருபொருள் உண்டு என்பதையும் அறிகிறான். ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவன் உண்டு என்று நெறிப்படுத்தியதே சமயம். அவை அனைத்தும் ஒரு வரன் முறைக்கு உட்பட்டு இயங்குவதையும் காண்கிறான்.சமயம் என்பது வெறும் குறிகளும் , அடையாளமும் அன்று. சமயம் என்பது அவற்றை கடந்து நிற்பது. குறிகள், அடையாளங்கள் என்று எதனையும் போற்றாமல் ஒருவன் சிறந்த சமயவாதியாக வாழ முடியும். மனித மனத்தின் மாசை அகற்றி, பண்புடையவனாய், ஒழுக்கம் உடையவனாய், பிறர்க்குப் பயன்படுபவனாய் வாழ முற்படுவதே சமய வாழ்க்கையாகும். அவற்றிக்கும் அப்பால் அனைத்தையுங் கடந்து நிற்கின்ற ஒன்றை - கடவுள் என்ற ஒன்றை மனதில் கொண்டு வாழ்பவனே சமயவாதியாவான்.எனவே, கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு ,வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறி மார்க்கங்களை தெளிவுப்படுத்துவதே சமயம்.மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய சமயநெறி. அவற்றின் நடைமுறையால் மாறுபட்டு முரண்பட்டுபோயின. உண்மையில் சமயம் என்பது தூயவாழ்க்கை முறை. மனிதனை நெறிப்படுத்திப் பக்குவப்படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை.மனிதனுடைய குறை நீக்கத்திற்கும், நிறை நல பேற்றிக்கும் சமய வாழ்க்கையே துணை செய்யும். புலன்களை பக்குவப்படுத்தும்; தூய்மையடையச் செய்யவும்; இன்ப அன்பு கனியும், அருள் பெருகும். ஆகவே, சமயங்கள் அன்பை மையமாக் கொண்டது. ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி. '' அன்பு சிவம் ரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ரும் அறிகிலார் அன்பே சிவமாவது ரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தார் [ திருமந்திரம் -270] என்னும் திருமந்திரப் பாடல் இவ்வுண்மையை உணர்த்தும். சமயங்கள் பல.'' பொங்குபல சமயமெனும் நதிகள் எலாம்புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்கங்குகரை காணாத கடலே ..''-- என்பது வள்ளாலார் வாக்கு.ஆறுகள் எல்லாம் எங்குத் தோன்றினாலும். எத்திசை நோக்கி ஓடினாலும், முடிவில் கடலினையே சென்றடைவது போல உலகத்தில் தோன்றிய சமயங்கள் எல்லாம் முடிவில் பரம்பொருளினிடத்தே சென்றடைகின்றன.என்பது அவ்வருளாளர் தம் கருத்து.சைவம், வைணவம், பெளத்தம், கிறித்தவம், சமணம், இஸ்லாம் என்னும் பற்பல சமயங்கள்தமிழிலக்கிய உலகில் காணப்படுகின்றன. அவை காட்டும் நெறிவழிச் சென்றால், முடிவில் '' பரம்பொருள் ஒன்றே '' என்ற கருத்திலேயே நிறைவுறுகின்றன. மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு இச்சமயங்கள் எல்லாம் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கின்றன. இலக்கியங்களும் சமயங்களும் சமுதாயத்தில் இருந்து முகிழ்க்கின்றன; சமுதாய வாழ்வியலிருந்து வெளிவருகின்றன. இதனால் அந்தந்தக் காலத்து மக்களின் ஒழுக்க முறைகளை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளைத் தெற்றென விளக்குவன இலக்கியங்களூள் சமயங்களுமே என்பதை அறியலாம். பெரும்பாலான இலக்கியங்கள் காட்டும் சமயப் பொறையினைக் கண்டு தெளிந்து, வாழ்வியலைமேற்கொள்ள வேண்டியது இக்கால இளையர்களுக்கு இன்றியமையாத தேவையும் சேவையுமாகும்.தொல்காப்பியர் காலத்துச் சமயப் பொறை.வேறுபாடுகளைக் கடந்து மனித குலப் பொதுமையை நமது சமயம் வலியுறுத்தியது. '' யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா '' என்னும் கணியன் பூங்குன்றனார் பாடல் உண்மை சமய நெறியை உணர்த்துவது. அடுத்து திருக்குறளிலும் தனியரு சமயத்தின் சாயல் இன்றிக் கடவுள் கொள்கையும்,சமயமும் பேசப்படுகிறது.குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல்கூறும் இலக்கியமாகவும் இருக்கிறது.தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறைஇருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவைமுதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,'' மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும் ''( தொல். அகத் .5)இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும்,அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.சமயக் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் மக்களை, அறவழிக்குட்படுத்த எழுந்தவையே நீதி இலக்கியம். அவ்வகையில் ' திருக்குறள் ' முதன்மையானது. ''ஆதி பகவன் முதற்றே உலகு'' என்னும் திருக்குறள் ' இறைவன் ஒருவனே ; அவன்தான் பரம்பொருள் ; முழுமுதற் பொருள் '' என்று குறிப்பிடுகிறது. ' கடவுள் வாழ்த்து' ப்பகுதியில் சமயப் பொதுமை நிலையில் இறைவனின் திருவடிச் சிறப்பையே சுட்டுக்காட்டியுள்ளார். திருவடி வழிபாடு, திணை, பால் கடந்த பொதுமை வழிபாடாகும். ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பாடிய 'திருவடித்தாண்டமும்''பதினைந்தாம் நூற்றாண்டில், அருணகிரி பாடிய 'சீர்பாத வகுப்பும் ' பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் பாடிய ' திருவடிப் புகழ்ச்சியும்' அமைந்து சமயப் பொறையை வலியுறுத்துகின்றன.இறைவனிடத்து மனிதன் வேண்டுவது என்ன என்பதை பரிபாடல் ஒன்று சிறந்த முறையில் கூறுகிறது. '' பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் அருளும் அன்பும் அறனும் ஒலி தாரோயே '' - என்கிறது. பயன் கருதாத வழிபாட்டை வேண்டி, ' அன்பும், அறனும் அருளும் ' மூன்றும் வேண்டும் என வேண்டி விழைவது சமயம் . தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் அளவைகளின் உதவி கொண்டு சமயத்தை நிறுவுவதைக் காட்டிலும் அகத்தே நிகழும் உணர்வுகொண்டே சமயத்தைப் பரப்பும் நூல்களே மிகுதியாகும். அதனால்தான் போலும் , சமய இலக்கியம் என்ற பெயரில் பக்தி இலக்கியங்களேதமிழில் மிகுதியாக தோன்றின. உலக மொழிகளில் பக்தி இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், முதல் இடம் தமிழுக்குத்தான். இரண்டாவது இடம் ஹீப்ரூ மொழியும், மூன்றாவது இடத்தை சமஸ்கிருதமும் இடம் பெறுகிறது. வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்த சில நூல்களும் உண்டு. அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம். அந்த ‘அன்பென்னும் பிடியுள் அகப்படும் மலையே’ அடிப்படையை மனத்தில் கொண்டு பார்த்தால் , தோத்திரங்கள் அதிகம் தோன்றியதற்கு உரிய காரணத்தை ஒருவாறு அறிய முடியும். என்றாலும் தமிழில்தோன்றிய பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடையது. பிறமொழிகளில் பல்வேறு துறையில் இலக்கியம் உண்டு. அவற்றுள் சில சமயம் பற்றியும் இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் இலக்கியம் என்ற பெயரைப் பெறக்கூடியவை அனைத்தும் சமயத் தொடர்பு உடையனவாய் இருத்தல் அரிதற்குரியது.சமயத் தொடர்பற்ற நூல்கள் தமிழிலும் தோன்றி இருக்கலாம். ஆனால், அவற்றிக்குக்காலத்தை வென்று நிலைபெறும் வன்மை இல்லைபோலும். பேரிலக்கியங்கள் ஒரு புறம் இருக்கச் சிற்றிலக்கியங்களாகிய பிள்ளைத்தமிழ் , குறவஞ்சி , பள்ளு , உலா ஆகியவைகள் சமயத் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது. ஆதலால்தான் 'சமயமின்றி தமிழில்லை ' என்று கூறுவது பொருள் பொதிந்த மொழியாக அமையக் காண்கிறோம். காப்பிய இலக்கியங்கள்.காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்ற குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் அந்தந்தக் காலத்துச் சமய பொறையினை எடுத்துக் காட்டுகிறது எனக்கூறலாம்.சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழையும் எடுத்துக்கூறும் தலைமை காப்பியமாகும்.அதன்சிரியர் ஒரு இளங்கோவடிகள், ஒரு சமணர். னால், சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம்,பெளத்தம் முதலிய சமயங்களையும் எடுத்து கூறுவதன் மூலம் சமயச் சார்பற்ற காலமாகச் சிலப்பதிகாரம் இருந்துள்ளமையை அறியலாம்.சைவ சமயக் கடவுள் சிவனைப் பற்றிப் பல இடங்களில் சிரியர் குறிப்பிடுகிறார்.மதுரை காண்டத்துள் வேட்டுவ வரியில், '' சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்பதையும்,தேவர்களுக்காக நஞ்சுண்டு நீலகண்டன் னான் என்பதையும், வாசுகியை நாணாகவும்,இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான் என்றும், கொன்றை மாலையைத்த்ரித்தவன் '' என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவனை..,'' பிறவா யாக்கை பெரியோன்...' - என்று போற்றுகிறது.வைணவ சமயக் கடவுள் திருமாலைப் பற்றிச் சிலம்பில், ஆய்ச்சியர் குரவையிலும், காடுகாண் காதையிலும் காணலாம். ஆய்ச்சியர் குரவையுள்,'' கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்...''என்ற குறிப்பும், திருமாலின் பெரிய கோயில் எனப்படும் ' திருவரங்கம் ' பற்றிய குறிப்பும்,திருமால் திசேடன் மீது பள்ளி கொண்டுள்ளான் என்ற குறிப்பும் ' காடுகாண் காதை 'யில்காணப்படுகிறது. மேலும் அவனுடைய திருவுருவ நலன்களும், அவன் யுதங்கள் ஏந்தி நிற்கும்திறமும், நின்ற கோலமும், கிடந்த கோலமும் கூறப்பட்டுள்ளன.சிலம்பின் கதை மாந்தர் சிலர் சமணக் கதை மாந்தர்களாகவே வந்துள்ளனர்.கவுந்த அடிகள், மாங்காட்டு மறையோன் முதலானோரைக் குறிப்பிடலாம். சமயத்தால் சமுதாயம் வேறுபாடு கொள்ளாமல் வாழமுடியும் என்று காட்டியுள்ளார்.வைணவக் காப்பியமான கம்ப இராமாயணத்தில் பிற சமயக் கடவுள் பற்றியும் கூறுகின்றது. இக்காப்பியத்துள் இராவணன், வாலி முதலானோரைச் சைவ சமயக் கடவுளானசிவனின் பக்தர்களாகவே படைத்துள்ளார். வாலியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,'' பஞ்சின் மெல் அடியாள்பங்கன் பாதுகம் அலாது யாதும்அஞ்சலித்து அறியாச் செங்கை '' உடையவன் என்றும், ' அட்டமூர்த்தி தாள் பணியும் அன்பன் ' என்றும் குறிப்பிடுகிறார். இராவணைனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ' சிவபெருமானால் முக்கோடி வாழ்நாள் வழங்கப் பெற்றவன் ' என்றும், ' துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் ' என்றும் குறிப்பிடுகிறார்.மேலும் சிந்தாமணி, மணிமேகலை முதலிய காப்பியங்களும், சமயக் காழ்ப்பற்ற நிலையினை விளக்க பல தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன. காப்பிய உலகில், குறிப்பிட்ட ஒரு சமயச் சார்பற்ற நிலையினை உணர்த்தி,புதிய சமுதாயமாக, சமய காழ்ப்பற்ற சமுதாயத்தை ஏற்படுத்தவே நமது முன்னோர்கள் முயன்றுள்ளார்கள்.அருளாளர்களின் சமயப் பொறைமனித இனத்தைத் தீமைகளிலிருந்து விலக்கி நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும்அருளாளர்கள், பெரியோர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் எல்லாம்சமுதாயத்திற்குச் சமயம் தேவை என்றும் ' பரம்பொருள் ஒன்று, அதனை அடையும் வழிகளே இச்சமயங்கள் ' என்றும் எடுத்துரைத்துள்ளனர்.'' ஒன்றே குலமும் , ஒருவனே தேவனும்ஒன்றது பேரூர், வழியாறு அதற்குள...''என்று திருமூலரும்....,'' யாதொரு தெய்வம் கொண்டீர் ; ங்கே அத் தெய்வமாகிமாதொரு பாகனார்தாம் வருவர் ..''-- என்று அருணந்திச் சிவாச்சாரியாரும்..,'' அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த பூர்த்தி யாகி அருளடு நிறைந்தது...''- என்று தாயுமானவரும்...,'' சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலேசாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் !அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே ..''-- என்று வள்ளலாரும்..,'' அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாற னார்க்கே...''-என்று அப்பர் பெருமானும்,'' அரியும், சிவனும் ஒண்ணுஅறியாதவன் வாயில் மண்ணு..''என்ற பழமொழியாலும், அரியையும், சிவனையும், சங்கர நாயாரண மூர்த்தமாகவழிபடும் முறையாலும் காணலாம்.தற்கால இலக்கியங்களில் என்றதும் பாரதி , பாரதிதாசன் நினைவு நமக்கு வருகிறது.'' எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பாயானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்..'எனப் படுவதால் அவரும் தம் ன்றோர் நெறிவழியே சமயச் சார்பற்ற உலகினை உருவாக்க நினைத்தார் என்பதனை,'' ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள் !'' -- என்பதன் வாயிலாக அறியாலம்.இவ்வாறு பாடலால் சமய வேறுபாடற்ற சமயப் பொறையுடைய சமுதாயத்தை உருவாக்கியவர்களாக திகழ்ந்துள்ளனர். இவைகளை தொல்காபியர் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரைசமய வேறுபாடற்ற ஒரு சமூகத்தினை நாம் தமிழிலக்கியங்களில் வாயிலாக அறிய முடிகிறது.

<> உருத்திராக்கம்<>

"அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை,
பொன்மை, குரால் (கபிலம் brown)என்னும் நிறங்களால்
ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை
முள்முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான
மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும்,
குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் "அணியப்பட்டுவருவதும், பனிமலை அடிவார நேபாள
நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று
பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின்
உருத்திராக்கம் (ருத்ரா‡) எனப் பெயர் மாறியதுமான

காய்மணி;

Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customerily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times "தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" (திருப்புகழ் 475). அக்கு பார்க்க; see akkuஅள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அ·கு. வெள் --> வெள்கு -->வெ·கு = விரும்பு,மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு. அ·கு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி."உருப்புலக்கை அணிந்தவர் " (திருவானைக் கோச் செங். 4) அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறுபெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர்முனைகளைக் கொண்டதென்றேபொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணிஎன்று புணரும். குள் --> கள் = முள். கள் --> கள்ளி = முள்ளுள்ள செடி. முள் --> முள்ளி,(நீர்)முள்ளி. குள் --> குளவி = கொட்டும் முள்ளுள்ளது. குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை வழக்கு).குள் --> கிள் --> கிள்ளி -->கிளி =கூரிய மூக்கினாற் கிள்ளூவது. கள் --> கண்டு = கண்டங்கத்திரி (முட்கத்திரி). கண்டு --> கண்டம் = கள்ளி, கண்டங்கத்திரி, எழுத்தாணி. கண்டு -->கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை. கண்டு --> கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள். கண்டல் -->கண்டலம் = முள்ளி. கண்டகம் --> கண்டகி = முள்ளுள்ள தாழை, இலந்தை, மூங்கில், முதுகெலும்பு.கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம். கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை. சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும். தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி:விண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம். இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லை பெருமாள் கோயிலுக்குப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.உண்ணம் --> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றனஇற்றைத் தமிழர்க்குப் பொதுவாக மதத் துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி யென்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அ‡ என்னும் வடசொற் திரிபே யென்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழுவுண்மை யென்றும், அதை ஆரய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.ஆரியவேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன் என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள் படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லொடு எள்ளளவுந் தொடர்பில்லை. அந்திவண்ணன், அழல்வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.சிவநெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குட் புகு முன்னரே, தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும் மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும், அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப் படி முண்மணி என்பதே அப் பெயர்ப் பொருளாம்.அக்கு - ak, to be sharp, to pierce, Gk. ak - ros, pointed, ak - one, whetstone,ak-me, edge. L., ac-us, needle, ac-uere, to sharpen, ac-ies, edge, acumen - anything sharp, AS , ecg, edge, E., acute, sharp, pointed, f.L., acutus, past participle of acuere Fr., aigu, acute.அக்கு என்பதே முதன்முதல் தோன்றிய இயற்கையான பெயர் . அது 'அம்' என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது. முத்து --> முத்தம் (பருமுத்து) அக்கம் = பருத்த சிவ மணி.ஆரியர் - திராவிடச் சிக்கலைத் தவிர்க்கலாம் எனிலும் சில உண்மைகளைமறுக்க இயலாதிருக்கிறது. பாவாணர் கொஞ்சம் வேகமானவர்." சைவரக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்;மற்றவை திருநீறும் ; திருவைதெழுத்தும்." முக்கண்ணன் சிவபெருமான் கண்ணிலிருந்தது உதிர்ந்த நீர்தான் உத்திராட்சம். அவர் கண்களிலிருந்து உதிர்ந்த நீரில் கண்டிமரம் தோன்றியது. சிவப் பிழப்பாக நெருப்புக் கண்ணிலிருந்து கரிய உருவக் கண்டி தோன்றின. "உருத்திரன் கண்ணீரில் உதித்தால் உத்திராக்கம் - உத்திராட்சம்" என்று பெயர் பெற்றது.சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும்போது " நெற்றியில்பட்டை" , "காவிச் சட்டை" , "கழுத்தில் கொட்டை "என்று வேடிக்கையாகவும்சில சமயங்களில் வினையாகவும் சொல்லவதுண்டு. உருத்திராட்சம் இதற்கு முன் அறியாதவர்கள் கூட அருணாச்சலம்திரைப்படம் மூலம் பலர் தெரிந்திருப்பார்கள்.இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உத்திராட்சம்ஓர் அபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆய்ச்சியாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.மன அழுத்தம் குறைய , மன உளைச்சல் நீங்க, இரத்த அழுத்தம்குறைய ,நோய்கள் நீங்க இந்த உருத்திராடச மாலை அணிவது நல்லது.தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கொள்ளலாம்38 வகையான உத்திராட்சத்தில் , 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப்பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வருசைப் படுத்தப்படுகிறது.ஒவ்வொரு முகத்திற்கும் பலன் உண்டு.[ ஒருமுகம் உருத்திராட்சம் கிடைப்பது மிக அபூர்வம். நான் நேப்பாளம் சென்றிருந்த போது ஒரு முக உத்திராட்சம் முதல் பதினாறு முகம் கொண்ட உத்திராட்சம் கண்டேன். இதில் ஒரு முக உத்திராட்சம் [சிறியது] மூன்று இலட்சம் நேப்பாள ரூபாய் வரைவிலை சொல்லப்பட்டது.]ஒரு முகம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்க பூண் போட்டு பத்திரப் படுத்தியிருப்பார்கள். பல தலைமுறையாக காத்து வைத்திருப்பார்கள். அதைவைத்திருந்தால் குடும்பத்தில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சில குழந்தைகள் 3 - 4 வயது வரை பேசாது இருப்பார்கள் அல்லதுசரிவர சொற்கள் வராது இருப்பார்கள். அந்த மாதிரி குழந்தைகளுக்குஇந்த உத்திராட்ச மணியினை 48 நாட்கள் உராய்த்து நாவில்தடவி வந்தால் சரியான பேச்சு வரும் [ அனுபவ உண்மை]ஒரு முகம் [ ஏகமுக] உத்திராட்ச சிவன் என்பர். இதனை அணிந்தால்பிரம்ம வாதன பாவம் நீங்கும் என்பார்கள்.இருமுக உத்திராட்சத்தினை சிவ சக்தி - கவுரி சங்கர் என்றும்சொல்வார்கள். இரு முக உத்திராட்சம் , மந்திரதந்திர சக்தி கொடுக்கும்-கொலைப் பாவம் போம். மும்முகம் அனலைக் குறிக்கும். வினை தீரும், அதிர்ஷ்டத்தையும்கொடுக்கும் என்பர்.நான்முகம் அதிதெய்வம். பாவம் தீரும் , எதிர்பாலிரை ஈர்க்க உதவும்.ஐம்முகம் தீங்கு தீரும், பிரச்சனைக்கும் தீர்வு காணும்.ஆறுமுக உருத்திராட்சத்திற்க்கு அதிபதி ஆறுமுகனே. பிரவதை பாவநிவர்த்தியையும் கொடுக்கும்.ஏழு முக உருத்திராட்சத்திற்கு ஈசன் நாகேசன் ; அபாயத்திலிருந்து காக்கும்.எட்டு முக உருத்திராட்சத்திற்க்கு உரியவர் விநாயகர்; திருட்டுக் குற்ற பாவம் தீரும்.ஒன்பது முக உருத்திராட்சத்திற்க்கும் தெய்வம் வயிரவன்; இதை அணிந்தால் கொலைப் பாவம் தீரும்.பத்து முகத்திற்கு பதி அரி ; இதனை அணியின் பேய் அஞ்சி நீங்கும். பதினொன்று [ ஏகாதாச ] இறை உருத்திரர் ; இதை பூண்டவர்க்கு விக்கினம் நீங்கும்.பன்னிரு முழ்கத்திற்க்கு தேவர் தித்தர் ; ஊறுங்கள் போம் எண்ணங்கள் நிறைவேறும்.பதின் மூன்று முக உத்திராட்சத்திற்கு தெய்வம் பரமசிவன்; இதனை தலையில் அணிந்தால் முக்தி உண்டு பதினாங்கு முக உத்திராட்சம் ருத்ர நேத்திரத்திலிருந்து உண்டானது.இதை அணிந்தால் எல்லா வியாதிகளும் போய் எப்போதும் இப்படி ஒவ்வொரு முகத்திற்க்கும் ஒவ்வொரு பலனாக உள்ளது உருத்திராட்சத்தை 3,4,5,6, எண்ணிகையில் வளையமாக கோர்த்து அணிவர்,கழுத்தில் அணியும் மாலைகள் 27 , 54 , 108 என்ற கணக்கில் இருக்கும்.கழுத்தில், கையில் அணியும் உத்திராட்சம் அங்·குபங்சர் போல் செயல் பட்டுபயனளிக்க கூடியதாம்.ஆரம்ப இந்தோஷியாவில் விளைந்த இது இப்போது நேப்பாளத்திலும், ஹரித்துவாரிலும் பயிராகிறது. நேப்பாளத்தில் பசுபதிநாத் கோயிலில் உத்திராட்ச மரம் ஓரளவு நன்கு வளர்ந்த மரத்தினை பார்த்தேன். ஆனால் காய்கள் இல்லை.அபூர்வமான இந்த உருத்திராட்சத்துக்கு கிராக்கி அதிகம். இதன் மகிமை உணர்ந்து, மரத்திலால் செதுக்கிய போலிகளும், அரக்கினால் உருக்கிய போலிகளும் விற்பனையில் நிறைய உள்ளது. உருத்திராட்சம் வாங்கினால் அது குறித்து அறிந்தோர், விபரம் அறிந்தோர் மூலம் வாங்கவும். போலியா , நிஜமா என்று அறிய அதனை தண்ணீர் போடவும்.மூழ்கினால் அசல், மிதந்தால் நகல் ! மந்திரமும் எண்ணும் :" ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,தற்புற மந்திரத்தால் ' செவியன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க; உரத்தில்[மார்பில்] 49 அணிக;தோள்களில் 16ம் அணிக ;மதரத்து 12 ம் அணிக;பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]விதிமுறைகள் / நியமம்:உத்திராட்சம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும்.உரையாடுவதில் , பேச்சில் இனிமை வேண்டும். கடுமையானகீழ்தரமான சொற்களை/ வார்த்தைகளை நீக்க வேண்டும்.மதுவை ஒழித்தல் வேண்டும்.மணி அளவு:பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி பூணுகிறார்கள்.ஏனினும் ' உத்திராக்க விசிட்டம் ' என்னும் நூலில் எந்த அளவு உத்திராட்ச மணிசிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமானது ;இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;கடலை அளவுடையது அதமம்.இதனை பின் வரும் வெண்பா ;" உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்புஇத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;பாசவிதம் பாற்ற நினைப் பார். "செபமாலைக்குரிய மணிகள்:இரண்டு முகமுடையதும் மூன்று முக உடையதும் செபமாலைக்கு உரியதுஅன்று ;பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.இதனை கூறும் பாடல் :இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாதுஇரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனேபத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.செபத்துக்குரிய விரல் :அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம்,மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும்,கனிஷ்டையால் இரட்சைணையும் .[அங்குஷ்ட: கட்டை விரல் ; தர்ச்சனி ள்காட்டி விரல்;மத்திமை : நடு விரல் ; அனாகிகை : மோதிர விரல் ; கனிஷ்டை : சுண்டு விரல்.] செபிக்கும் ஒலி:செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.மானதமாக உச்சிப்பது உத்தமம் ;மானதம் முத்திக்கு ஏது ;மந்தம் புத்தி சித்திக்கும்;இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.1008 செபித்தல் உத்தமம்;அதிற்பாதி மத்திமம்;108 செபித்தல் அதமம்"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க;தனாது குருவும் அதனைக் காண்டல் கூடாது ' என்பது விதி. செபிக்கும் காலம் உத்திராட்ச மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக்கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ணுக;செபமாலை அறுந்து வீழின் , குறைவற முன்போல் கோவையாக்கி,முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க.பொது:சிவபக்தருக்குக் உத்திராட்ச தானம் செய்வது சிறப்புடையது.உத்திராட்சம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம்.மேற்கண்டபவைகளை கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடிஅருளிய ' உத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.திருவாடுவடுதுறை தீனம் 1954- ல் வெளியீடு.அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். இதன் பொருள் " மும்மை "என்பது உத்திராட்சம் , ஜடை , திருநீறு .இந்த மூன்றையே உண்மைப்பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும்உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும்அறியவரும்.திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன் , வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில்கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தை கட்டினான். காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலை கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின் தந்தையாகிய பரமேசுவரவர்மன் மாகபலிபுரத்தில் ' கணேசர் ' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்கள் கல் வெட்டியில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலோடையாக உள்ளது. அதில் இரண்டாவது ஆறாவது சுலோங்கள் அவ்வரசன் உருத்திராட்ச மணிகளாலாய சிவலிங்கத்தைத் தலைமுடியாகஅணிந்தவன் என்று அறியவருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது கண்கூடு ; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் " முத்து விதானம் " அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர்.இங்கு கண்ட முத்து உருத்திராட்ச மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில்"அமைய வேண்டுவது ' உத்திராட்ச விதானம் ' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட சிறீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பலசிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம். [நேப்பாளத்தில்] காட்மண்டில் பதிபதிநாத் கோயிலிலும் காணலாம்.காரைகுடிக்கு அருகில்இருக்கும் பிள்ளையார் பட்டியிலிருக்கும் விநாயகர் கோயிலில் [உரித்த தேங்காய்] அளவு உத்திராட்சம் இருப்பதாக பலர் சொல்ல கேட்டுயிருக்கிறேன்"நெக்குளார்வ மிகப் பெருகி நினைந்தக்குமாலை கொண்டங்கை யிலெண்ணுவார்தக்கவானவராய்த் தகுவிப்பதுநக்க நாம நமச் சிவாயவே " - சம்பந்தர்.

<> பசித்திரு<>

பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக் மந்திரத்தை
வடலூர் வள்ளற்பிரானகியஇராமலிங்க அடிகள் முதன்
முதலில் மக்களுக்கு போதித்தார். அதன் பின்னர்தான்
அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர்.

ஆன்மீக நாட்டம் கொண்டோர் அதாவது இறைவனது
திருவடிகளைப் பற்றி கொள்ளவேண்டும். தனித்திருக்க
வேண்டும். விழித்திருக்க வேண்டும் எனப் பொருள்
கூறப்பெறுகிறது.

இவ்வாறு பசித்து, தனித்து , விழித்து இருந்தால் பதவி
கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.அதாவது சிவபதவியோ,
வைகுண்ட பதவியோ கிடைக்கும் எனவும் கூறப் பெறுகிறது.

இவ்வாறு இருந்தவர்கள் இப்பதவிகளைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.பசித்திரு, விழித்திரு, தனித்திரு எனும் சொற்களுக்குரிய உண்மைப் பொருளைஉணர முற்படுவதே நமது எண்ணமாகும்.

பசித்திரு என்பது பட்டினி கிடப்பது அன்று. வயிற்றைக் காயப்போடுதல் மிகச்சிறந்தமருந்தாகும் என்பார்கள் சித்த வைத்திய, ஆயுர்வேத மருத்துவர்கள். இல்லாமையினால் பட்டினி கிடப்பதற்கும் - எல்லாமிருந்து உண்ணாமல் நோன்பு நோற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
இது உடலைப் பொருத்த விஷயமன்று.உணர்வைப் பொருத்தது.

மனதின் ஆளுமையில் அடங்குவது. எண்ணங்களின் தொகுதிதான்
மனம். ஏதும் இல்லாமையினால் பட்டினி கிடப்பது இறப்பிற்கு
சமமாகும். எல்லாம் இருந்தும் புலன் அடக்க, உணர்ச்சி அடங்கி,
உணர்வு விழித்து உயிர் தழைக்க இருக்கும் நோன்பிற்கு [விரதம்]
என்பதே உண்ணா நோன்பு.

இதுவே பசித்து இருத்தல்.இவ்வாறு
இருத்தல் உடலுக்கு நல்லது. ஊனுடம்பு ஆலயம், உடல் நலமானால் உள்ளம்வளமாகும். உள்ளம் வளமானால் உயிர் தளிர்க்கும். பசித்திருத்தல் உடல் தொடர்புடையது.இந்நிலையில் உடலுக்கு நன்மை பயக்கும். மிதமான உணவே நீண்ட ஆயுளுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் வழியாகும்.நாள் தோறும் ஒருவர் பசித்திருந்து - பசித்திருப்பது அறமாகிய உண்ணா நோன்பினைஒருவர் மேற்கொண்டால் உடல் நிலை என்னவாகும்? விரைவில் இந்த உடல் அழிந்துஇறந்து விடுவார். இவ்வாறு உடல் அழிந்துவிடும் ஒன்றையா ஆன்றோர்களும், சித்தர்பெரியோர்களும் சொல்லியிருப்பார்கள்.குரு இட்டும், தொட்டும், சுட்டிக்காட்டாத வித்தை கைவசம் ஆகாது என்பார்கள்.குரு வழி செவிச் செல்வத்தைப் பெறாதவர்கள் ஆன்மீகத்தில் அதன் எல்லையைஅடையமுடியாது. குரு தயவின்றி நடுக்கண் புருவப்பூட்டுத் திறக்காது. எனவே குருவேசிவம். மெய்வழிச் செல்லும் மெய்க்குரு முன்னிலையில் சீடன் பதித்திருக்கவேண்டும்.ஏனெனில் குரு ஞானச் செல்வத்தை வாரி வழங்கும்போது அதனைச் செவி வாயாக,நெஞ்சில் கொள்ளுவதற்கு உடல் பசித்திருக்க வேண்டும்.பசித்திருந்து ஞானத்தைக் கேட்க வேண்டும்.உடல் தள்ர்ச்சியுறாமல் இருக்க அரை வயிறுஉண்டால் போதும். அபோதுதான் புலன்கள் விழிப்போடு ஒருமைப்பட்ட மனத்தோடும்,ஞானச் செல்வத்தைச் செவிமடுக்கும். எனவே பசித்திருத்தல் என்பது இல்லாமையினால்பட்டினி கிடப்பது அன்று. சில குறிக்கோள்களை முன்வைத்து உண்ணா நோன்புஇருத்தலும் அன்று.ஞானச் செல்வத்தைச் செவிவழி அருந்திட ஞானப்பசி மூதுர உடல் பசி மறந்து வாய்மூடிஇரு செவி திறந்து கேட்டிருக்கும் நிலையே பசித்திருத்தல். குருவின் உபதேசத்தால் மெய்யாகிய அறிவைக் காட்டித் தருகிற போது இதுவரை மன அறிவால் படித்தவை,கேட்டவை, உணர்ந்தவை அனைத்தும் மெய்யைக் காண, அறிய, உணரத்தடையாகஅமையும். எனவே யதார்த்த உள்ளத்தோடு செவி மூலமாக ஞானத்தைப் பருக, கேட்கவேண்டும். பசித்திருக்கும் ஞானப் பசியும் இதுவேயாகும்.

<>ஒரு வாலைப்பெண் <>

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன்.
இப்பெண்ணைப்பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில்
இருந்த முத்துக்குமாரு என்பவர்.

அப்பாடல்:"முடிவிலாதுறை சுன்னாகத்தான்முந்தித் தாவடி
கொக்குவில் மீது வந்துஅடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாதனையென்று
பலாலிகண்சோரவந்தனள் ஓர் இளவாலையே"இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின்(சுன்னாகம்,
தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை,கட்டுடை,
உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை)
பெயர்களிருக்கின்றன. ஆனால், இவற்றின் கருத்து
வேறுவிதமானது.

கருத்தைப் பார்ப்போம். பல துறைகளையுமுடைய
வெள்ளிமலைக்குத் (சுல் + நாகம் - வெள்ளிமலை)
தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய
குதிரை (கொக்கு - குதிரை) மீது வந்து குறித்த இடத்திற் சேர,
ஒரு பெண் கொடிபோன்ற அழகையுடையாள், அசைந்து
மார்புக்கட்டை அவிழ்த்து விட்டாள். நட்சத்திரக்கூட்டங்களுக்குத்
தலைவனான சந்திரன் தோன்ற கருப்புவில்லைஉடைய மன்மதன்
மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்தமார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து,
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.

இதே போன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.
அவர் ஊர்களின் பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு
கிழமையிலுள்ள ஏழு நாட்களையும்ஒழுங்காக அமைத்துப்
பாடுகிறார். தமிழ்நாட்டில் "தளசிங்கமாலை" என்றநூலிலுள்ளது அப்பாடல்."ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்
செவ்வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வரவேயுறு
வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்தாய் சனியாயினளே,
ரகுநாத தளசிங்கமே"இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த
வாயிலிருந்துவிரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச,
மன்மதன் பாணமெய்ய,தென்றல் வீச, மூங்கிலையத்த
அழகிய வளையங்கள், விரகதாபத்தினால் சோர்ந்து விழ, நான்
உன்னை வந்து சேர்வதற்குத்தாய் குறுக்கே நிற்கின்றாளே
என்பதாம்.
இதில் ஒரு கிழமையின் ஏழு நாட்களும், ஒழுங்காக
வந்துள்ளமைகாண்க. இது "தாய் துஞ்சாமை" என்னும்
அகப்பொருட் குறையச்சுட்டும் பாடலாகும்.இவ்வகைச்
செய்யுள்களை "நாமாந்திரிகை" என்னும் யாப்புவகையில்
அடக்குவர்.

<> திசைகளும் தீபங்களும்<>

நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில்
தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம்
ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய
முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே
ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்
மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில்
உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே
ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.

சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட
திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில்
உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும். திரியில்லாமல் தீபம் ஏது? திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா? சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்? எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்...?நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே? ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும். செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.எண்ணெய்க் குளிப்பு!எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல்.அரபு நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க காரணம் எண்ணெய்.தண்ணீரும் ஒரு அரிய பொருளாகப் போகிறது.சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள கங்கை நதி, சீனாவின் வடக்குப்பகுதியிலுள்ள நதி மற்றும் மெக்சிகோ,ஜோர்டான், அரேபியா, அமெரிக்காவின் தென் பகுதியிலுள்ள நதிகள் எல்லாம் ' என்றும்வற்றாத ஜீவ நதிகள்' என்று கூறப்பட்டது. கங்கை போன்ற நதிகளின் நீர் நிலைவற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர்பஞ்சம் வரப்போகிறது. குடி நீர் கிடைக்காது. உலகத்தில் மிகப்பெரிய நதியான நைல்நதியைப் போல் 20 நைல் நதிகள் அளவு தண்ணீர் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும்.இனி எண்ணெய்:ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.* மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு. ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது* ஆண்களுக்கு, திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். [ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]* இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் இணையஅன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும் அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விடஅறிவினையும், உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் - மதித்தார்கள்.எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.எண்ணெய் என்று வரும் போது அதன் தொடர்பான வேறு சில விழயங்களையும் இத்துடன்இணைத்துவிடுகிறேன்.திசைகளும் - தீபங்களும்:நெய்:தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் - இல்லறத்திற்கும் நலனை தருகிறது.நல்லெண்ணெய்:நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.விளக்கெண்ணெய்:தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.திரியின் வகையில் பஞ்சுஇலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.தாமரைத் தண்டு:தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும்.[ வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]துணி:புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காயவைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.திசைகளும் பலனும்கிழக்குகிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.மேற்கு:மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்நீங்கும்.வடக்கு:வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய்இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.இறைவனுக்கு உகந்த எண்ணெய்:மஹாலட்சுமி : நெய்.நாராயணன் : நல்லெண்ணெய்

<> நவராத்திரி<>

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.முக்கியமாக பார்க்க
போனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு
அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும்
நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.இந்த
சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி
சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன்
ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்துதசராகக்
கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு
இரவைச்சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடு
கிறார்கள்.

இந்த பண்டிகைமைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு
சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.சரத் காலத்தின் முக்கிய
மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமைதிதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.சரத்காலம் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன்,இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்குபுறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்றுமீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள் என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும். சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன் அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய் சக்தி வழிபாடு.சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.இவை இரண்டில்'சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது;தனிச் சிறப்புடையது.நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன்.சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின்தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்றஅசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி][ மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில்சிற்ப வடிவில் நாம்கண்டுள்ளோம்] வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை,சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை . இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி .இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.தமிழ் நூல்கள் சரஸ்வதியை, 'ற்றங்கரைச் சொற்கிழத்தி ' என்று குறிப்பிடுகிறது.இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வதுமுறையாகும். இது தேவியின் அவதார நாள்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவுபெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது.ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது.எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளைமகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள்.பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும்.அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி,கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதிஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்சிறப்பாக உள்ளன.துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.